நம்முடைய சரீர அவயவங்கள் அனைத்தும் தலையால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவை தலையாக கொண்ட சபைகளான நாம் அவருடைய வசனங்களுக்கு கட்டுப்பட்டு '...தலையாகிய கிறிஸ்துவுக்குள்...' (எபே 4:15) வாழ்வதே சரியானது தலையின் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத அவயவங்களின் செயல்பாடு வியாதியாக கருதப்படும்.
நம்முடைய சரீர அவயவங்கள் ஒருபோதும் ஒன்றையொன்று தாக்கிக்கொள்வதில்லை மாறாக ஒரு அவயவம் துன்பப்பட்டால் மற்ற அவயவங்கள் அனைத்தும் அதனோடுகூட வேதனைப்படும். ஒரு அவயவத்தின் வேதனையை மாற்ற மற்ற அவயவங்கள் அனைத்தும் ஒத்துழைக்கும். கிறிஸ்துவின் சரீரத்தின் சக அவயவங்களாகிய நம்முடைய சகோதரர்கள் துன்பப்படும்போது அவர்களுடைய துன்பத்தை மாற்ற துணைநிற்பது அவர்களுக்காக ஜெபிப்பது நம்முடைய தார்மீக கடமையாகும். அவர்களில் யாரேனும் விழுந்துபோனாலோ பின்மறிப் போனாலோ நாம் அவர்களை அரவணைத்து கிறிஸ்துவின் அன்பில் நிலைநிறுத்துவதும் கூட நம்முடைய கடமையே..!
சிந்தனைக்கு:-
- சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு-5:19)
- அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபே 4:22-24)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக