Translate

கிறிஸ்தவத் திருமணம்...! வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது எப்படி..?


இவள் என் எலும்பில் எழும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். ஆதி-2:23


யாரை திருமணம் செய்வது என்கிற குழப்பம் எல்லோருக்கும் வரும் ஓர் இயல்பான காரியம். இதை பலரும் பெரிதுபடுத்தி பலவற்றையும் யோசித்து பின்பு வருத்தப்படுவதும் இயல்பு. பரிசுத்த வேதாகமம், திருமண வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி ஆயத்தப்பட வேண்டும், வாழ்க்கையில் எப்படி ஓர் கணவனாக, மனைவியாக உண்மையாய் இருக்கவேண்டும், உங்கள் கடமை என்ன என்பதை தெளிவாக விளக்குகிறது.

கிறிஸ்தவர்கள் அந்நிய மதத்திலிருந்து பெண் எடுக்கலாமா? என்பது அடிக்கடி கேட்கப்படும் பிரபலமான கேள்வியாக விளங்குகிறது.
 
தேவன் ஆதாம் ஏவாளை படைத்த போது மதத்தையோ, ஜாதியையோ வைத்து இனம் பிரிக்கவில்லை. மதம் தேவனை விட்டு சென்ற, மறுதலித்த மனிதர்கள் மூலமாக பிறந்த ஒன்று. சிலர் கோத்திரங்களை முன் வைப்பார்கள். 12 கோத்திரம் இருந்தது. தேவனே அதை பிரித்தார் என்று பலர் பல கோணங்களில் ஆராய்வதுண்டு. இதன் உருவாக்க காரணத்தை தேவன் எண்ணாகமம் 10-ம் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
 
கலப்பு திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டது (உபாகமம் 7:3-4). இருப்பினும், இதன் காரணம் அடிப்படையாக இனம், ஜாதி, கோத்திரத்தை சார்ந்ததல்ல, மாறாக கிறிஸ்தவ மார்க்கத்தை சார்ந்தது.

காதலித்து திருமணம் செய்யலாமா என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு... எல்லாவற்றிற்கும் நமக்கு வேதாகமமே ஆதாரம். பரிசுத்த வேதாகமத்தில்  'உன் இளவயது மனைவியோடே மகிழ்ந்திருஎன்று தான் அதிகமாக போடப்பட்டுள்ளது. இளவயதில் காதலித்து மகிழ்ந்திரு என்று போடவில்லை. அதற்கு பதிலாக திருமணத்தை குறித்தும், ஓர் பெண் திருமண வாழ்க்கையில் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்றும் எடுத்து கூறுகிறது.

ஓர் கிறிஸ்தவர் இன்னொரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதை போலத்தான் கிறிஸ்தவர்கள் பெண், ஆண் கொள்ளும் போது அவர்களை அழகை வைத்தோ, பணத்தை வைத்தோ, வேலையை வைத்தோ, ஜாதியை வைத்தோ, மற்றெந்த உலகபிரகாரமான முறையை வைத்து தெரிந்தெடுக்க கூடாது. வாழ்க்கை துணை ஒரு இரட்சிக்கப்பட, சபை ஆராதனையில் மட்டும் அல்ல ஊழியங்களிலும் பங்கெடுக்கும் கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே முதலும் எல்லாவற்றிற்கும் மேலானதுமாக இருக்க வேண்டும்.

ஒரு பெண் ஒரு மனிதனை பார்த்து அவரை வாழ்க்கை துணையாகக் தீர்மானிக்கும் முன் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள், இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவரா?. இவர் எவ்வித பழக்கங்களை கொண்டிருப்பவர்? என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சண்டையை கொண்டு வருவாரா? மது அருந்துபவரா? புகை பிடிப்பவரா? என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பெண், பார்க்க வந்த ஒவ்வொரு ஆணிடமும் கேள்விகள் கேட்டு, ஒவ்வொருவரையும் தள்ளி, இன்னும் திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள்...!

கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டுபேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போகின்றனர் என புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவனே வாழ்வின் மையம், அடுத்ததாக வாழ்க்கை துணை. தேவனுக்கு எதிலும் இடம் கொடுக்காதவரானால் அது எப்பேர்ப்பட்ட மன வேறுபாடுகளையும் வேதனைகளையும் உருவாக்கும்!? ஆகவே கிறிஸ்தவரல்லாத ஒருவரை திருமணத்திற்கு நிச்சயிக்கும் முன் , உறவாட ஆரம்பிக்கும் முன், கிறிஸ்தவ பெண்களும்  ஆண்களும் சிந்தித்து, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லி, பின்னர் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்க வேண்டாம்!

சில எச்சரிப்புகள்: இரட்சிக்கப்பபடாத எந்த ஓர் பெண்ணையும், ஆணையும் திருமணம் செய்ய கூடாது. 1 ராஜாக்கள் 11ம் அதிகாரத்தில் சாலோமோன் அந்நிய பெண்கள் மேல் ஆசைப்பட்டதினால் "நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள்" என்று கத்தார் எச்சரித்திருந்தும் கேளாமல் போனதினால் சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப் பண்ணினார்கள். அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற் போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

வரதட்சணை... காசு வாங்கி திருமணம் செய்வது காசு கொடுத்து விபச்சாரம் செய்வதை விட கேவலமானது..நீங்கள் எப்படி?

தேவன் கற்பித்த காரியங்களை செய்யாமல் போவீர்கள் என்றால் கர்த்தர் உங்கள் மேல் கோபம் கொள்ளுவார். முடிவு சிம்சோனை போன்று பரிதாபமாய் இருக்கும். இருளுக்கும் ஒளிக்கும் சம்பந்தம் ஏது? . கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? (மாற்கு 10:8) அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; என்று எழுதப்பட்டுள்ளது. இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. சாத்தனை வணங்குகிறவர்களும், இயேசு கிறிஸ்துவை தேவன் இல்லை என்று மறுதலிப்பவர்களும் எப்படி உன்னோடு ஆலயத்திற்கு வந்து ஒருமனதோடு தேவனை ஆராதிக்க முடியும்?  "இரண்டு மூன்று பேர் என் நாமத்தினாலே எங்கு கூடுகிறார்களோ?" என்கிற வார்த்தை இரண்டு என்றால் கணவன் மனைவி, மூன்று என்றால் உன் பிள்ளை. அவிசுவசியோடு பினைக்கபட்டால் எப்படி ஒரு மனம் வரும். சாத்தான் தான் கூடு கட்டி கும்மாளம் அடிப்பான்.

திருமணத்திற்கு பிறகு மாற்றி விடுவேன் எற்று சவால் விட்டவர் எல்லாம் சாலமன் போன்ற கதைக்கு தூணாகி விட்டனர். தம்பி தங்கையே.. சவால் இதில் வேண்டாமே...!. இது தேவனின் ஆலோசனை அல்ல.. கட்டளை. (I இராஜாக்கள் 11). பின்பற்றியே ஆகவேண்டிய கட்டாயம். நீ பின்பற்றி தான் ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் "கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்" செய்கிறாய். தண்டனை என்ன தெரியுமா? உங்களிடம் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை, தேவனின் திட்டங்களை பரிசுத்த தேவன் பிடுங்கி மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார். (I இராஜாக்கள் 11: 11 நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.)

(2 கொரிந்தியர் 6) - நீங்கள் இப்படிப்பட்டவைகளை பிரிந்து இல்லாவிட்டால் தேவன் உங்கள் பிதாவை இருக்க மாட்டார். நீங்கள் அவருடைய பிள்ளைகள் கிடையாது. தேவன் உங்களை ஒதுக்கி வைத்து விடுவார். ஏசாயாவின் அதிகாரத்தில் அந்நிய தேவனை பின்பற்றுகிறவர்களை தேவன் எப்படி சபிக்கிறார் என்று வாசித்து பாருங்கள். அவர்கள் சந்ததி வேசியின் சந்ததியாக மாறும் என்கிற நிலையை 1ம் அதிகாரத்திலேயே எச்சரிக்கிறார். இது தான் இன்று பல கிறிஸ்தவ நாடுகளில் (அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பல) நடந்து வருகிறது.

பிற மதத்திலிருந்து  இரட்சிக்கப்பட்ட பல வாலிபர்கள் திருமணத்தின் போது தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக பெண்கள் இதில் மிகவும் துன்பப்படுகின்றனர். ஆனால் இவர்கள் விசுவாசம் இவர்கள் குடும்பத்தையே சில நேரங்களில் மாற்றி விடுகிறது. இவர்களை சரியான பாதையில் நடத்தவும், இவர்களது திருமணத்தைப் பற்றி யோசிக்கவும், சபைகளும் ஊழியங்களும் முன் வர வேண்டும்.

Originally posted by,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக