ஒரு
பிரபலமான வயலின் இசைக்கலைஞர் இருந்தார். அவர் புகழின் உச்சியில் இருந்தபோதிலும் 10 முதல் 12 மணிநேரம் வயலின் இசைத்து பயிற்சி பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒருமுறை அவரது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த
அவர் "எனது
வெற்றியின் இரகசியம் தினம்தோறும் பயிற்சி செய்வதுதான்.
·
ஒருநாள்
பயிற்சி செய்யவில்லை என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை என்னால் அறிய முடியும்.
·
இரண்டு
நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதனால் ஏற்படும் மாற்றங்களை என் விமர்சகர்கள்
கண்டுபிடித்துவிடுவார்கள்.
·
நான்
மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து
கொள்ளும்" என்றாராம்.
வெற்றிகரமான கிறிஸ்தவ
வாழ்க்கைக்கு ஜெப வாழ்க்கை மிகவும் இன்றிமையானது,நம்முடைய கர்த்தரும்
இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து ஜெபத்தை குறித்தும் அதன்முக்கியத்துவத்தை குறித்தும்
சீடர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார். மேலும் அவரே முன்மாதிரியாக
வாழ்ந்தும் காட்டியுள்ளார். உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை குறிப்பிடலாம்.
சோர்ந்துபோகாமல்
எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் ... (லூக் 18:1)
நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் .... (லூக் 22:46)
....., அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். (லூக் 6:12)
இன்றும்கூட
வெற்றிகரமாக ஊழியம்செய்யும் போதகர்கள் தங்களது வெற்றியின் இரகசியமாக கூறுவது
பலமணிநேர ழுழங்கால் ஜெபத்தையும் வசன தியானத்தையும்தான். பிசாசுகளை துரத்தவும்
வியாதியஸ்தர்களை குணப்படுத்தவும் கூட விசுவாசத்துடன்கூடிய ஜெபவாழ்க்கை
அவசியமாகிறது.
(மத் 17:21 இவ்வாறு கூறுகிறது) இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும்
புறப்பட்டுப்போகாது ...
மேலும்
கிறிஸ்துவின் சீடர்களாகிய அனைவருக்கும் இயேசு சிலுவையில் வெற்றிசிறந்ததன் மூலம்
பல்வேறு அதிகாரங்களை உறுதி செய்துள்ளார் (கிறிஸ்துவின் கொள்கைகளை பின்பற்றுவோர்
அனைவரும் அவரின் சீடர்களே...!)
(மத் 28:19-20) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி
அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்
என்றார்.
(மாற் 16:16-17) விசுவாசமுள்ளவனாகி
ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;..............
வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
மேற்படி
அதிகாரங்கள் நம்முடைய வாழ்கையில் செயல்படவில்லை என்றால் நம்முடைய விசுவாசக்குறைவு
மட்டுமல்லாது அறியாமை மற்றும் ஜெபக்குறைவும் அதற்கு காரணமாகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
கிறிஸ்து தனது இரத்தத்தின் மூலம் நமக்கு சம்பாதித்து தந்த உரிமைச் சொத்தாகிய
அதிகாரங்களை ஜெபத்தின் மூலமாகவும் வேத தியானத்தின் மூலமாகவும் பெற்றுக்கொண்டு
அவற்றின்மூலம் பிசாசின் தந்திரங்ளை ஜெயிக்க தூய ஆவியானவர் தாமே நமக்கு
துணைபுரிவாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக