இஸ்ரவேல்(யூதா) தேசத்தை தாவீதின் வம்சத்தை சேர்ந்த ஆகாசின் குமாரனான எசேக்கியா என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் கர்த்தரிடத்தில் பற்றுள்ளவனாக மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளைகளை கைக்கொண்டு வாழ்ந்தான். அவன் யூதா தேசத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை துரத்தினான். அன்னிய மன்னனான அசீரிய மன்னனுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தினான். சிறிதுகாலத்துக்குப் பின்பு அசீரிய மன்னன் படையெடுத்து வருவதை அறிந்து கப்பத்தை செலுத்தினான். ஆயினும் படை ரப்சாக்கே என்னும் பிரதிநிதியின் தலைமையில் எருசலேமை அடைந்தது. அவன் எருசலேமின் அலங்கத்தின்மேல் ஏறிநின்று மன்னனையும் இஸ்ரவேலின் தேவனையும் நிந்தித்தான். எசேக்கியாவோ கர்த்தரை நோக்கிப்பார்த்தான். கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக அவர்களிடம் அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்றார் (2இரா 19:6) சற்றும் தாமதமில்லாமல் ரப்சாக்கே என்னும் மனிதன் ஒரு செய்தியை கேள்விப்பட்டு திரும்பிச்சென்றாலும் கடிதங்களுடன் தனது தூதூவர்களை அனுப்பினான். எசேக்கியாவோ மீண்டும் கர்த்தரை நோக்கிப்பார்த்தான்.
சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய வாழ்கையிலும் சில பிரச்சினைகளுக்கு முடிவேயில்லையா என நாம் அங்கலாய்ப்பது உண்டு. அது ஒருவேளை வியாதியாக இருக்கலாம்; குடும்பபிரச்சினையாக இருக்கலாம்; சத்துருக்களிடமிருந்து வரும் பிச்சினையாக இருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஒருபிரச்சினையாக இருக்கலாம். வேதம் சொல்லுகிறது நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபே 6:11-12) இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களுக்கு ஒரு தனிப்பட்ட மனிதன் எதிரியே அல்ல. ஒரு நபர் நமக்கு எதிராக அநியாயமான காரியத்ததை துணிந்து செய்கிறார் என்றால் அதற்கு பின்னால் நம்மை நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கி விசுவாசத்தை விட்டு விலகச்செய்வதற்காக கிரியை செய்யும் ஏதேனும் ஒரு மேலே குறிப்பிட்ட பொல்லாத ஆவி காணப்படும். சுவிஷேஷத்தின் அடிப்படையில் துன்பப்படுத்துபவர்களுக்கு எதிராக கூட்டம் சேர்க்கவோ போராட்டம் நடத்தவோ தாக்குதல் நடத்தவோ வேதம் நம்மை அனுமதிக்கவில்லை மாறாக எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் ...வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் என்று கூறுகிறது. (எபே 6:18)
எசேக்கியா மன்னன் தனக்கு உதவிசெய்யும்படி மனிதர்களிடம் ஆதரவு கேட்காமல் கர்த்தரிடம் உதவிக்காக மன்றாடினான். அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான். (2இரா 19:35-37)
சிந்தனைக்கு:-

- நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலி 4:6-7)
- ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்., பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். (ரோம 12:17-18)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக