உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். (லேவி 19:2) என்று கட்டளையிட்ட பரிசுத்தமுள்ளவரும் பரிசுத்தத்தை விரும்புகிறவருமான நம்முடைய தேவனாகிய கர்த்தர் பல காரியங்களை தாம் வெறுப்பதாக கூறியுள்ளார். அவற்றில் ஒன்றைக்குறித்து சற்று தியானிக்கலாம். நீதிமொழிகள் 20:10 சொல்லுகிறது வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நிச்சயமாகவே கர்த்தர் அநீதியான காரியங்களை வெறுக்கிறார். வியாபாரம் செய்கிற சகோதரர்கள் கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தையும் தயவையும் தேவ ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள அவர்கள் நேர்மையானவர்களாக இருக்கவேண்டியது அவசியம். கர்த்தர் அவர்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
வியாபாரம் செய்யாதவர்களாகிய நாம் வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துவது உண்டோ.!?. ஆம்...! எப்போது எவ்வாறு பயன்படுத்துகிறோம், சில உதாரணங்ளை ஆராய்வோம்.
சிந்தனைக்கு:-
வியாபாரம் செய்யாதவர்களாகிய நாம் வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துவது உண்டோ.!?. ஆம்...! எப்போது எவ்வாறு பயன்படுத்துகிறோம், சில உதாரணங்ளை ஆராய்வோம்.
- நாம் செய்யும் தவறுகளை ஒழுங்கீனங்களை நியாயப்படுத்துபவர்களாவும் சம தவறை செய்யும் மற்றவர்களை கண்டிப்பதிலும்; திருத்தமுயல்வதிலும்; அவமதிப்பதிலும்; அதி நீதிமான்களாக காணப்படும்போதும் வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
- பொறுப்பான பதவியிலிருக்கும்போது நமக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் இன மத மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
- ஒன்றுக்கு அதிகமான குழந்தைகளிருக்கும்போது ஒரு குழந்தையை அதிகமாகவும் மற்றொரு குழந்தையை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
- தன் தாயை அதிகமாகவும் கணவனின் தாயை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
- தன்மகளை அதிகமாகவும் உற்றர் உறவினர்களை சொந்தபந்தங்களைவிட்டு தன் மகனின் மனைவியாக வந்த மகளை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
சிந்தனைக்கு:-
- அவர் பாரபட்சமில்லாமல் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்." (மத் 5:45)
- ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத் 5:48)
- பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். (நீதி 21:3)
- முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான். (நீதி 28:21)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக