சகேயு என்பவர் இஸ்ரவேல் நாட்டில் உள்ள எரிகோ பட்டணத்தில் வசித்துவந்த பாவியான
மனிதர். இவர் ஆயக்காரர்களுக்குத் தலைவர் (Chief Tax Collector). இன்றைய நம்மூர் வருவய்த்துறை அதிகரிபோன்ற அன்றைய பதவி.
நேர்மையானவர் அல்ல ஆனால் வசதியானவர் உருவத்தில் சற்று குள்ளமானவர். பாவியாக
வாழ்ந்தாலும் அவரது மனதில் ஒரு தீராத தாகம். இயேசுவைக் காணவேண்டும் என்பதே அது.
இயேசு அற்புதங்கள் செய்கிறார், அதிசயம் செய்கிறார், நோய்களைப்போக்குகிறார், பேய்கள் அவரைக் கண்டமாத்திரத்தில் ஓடுகின்றன,
மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்,
அதிகாரத்தோடு போதிக்கிறார்
என்றெல்லாம் இயேசுவைக்குறித்து அவர் பலவாறாக கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
அவரது நீண்டநாள் ஆர்வம் நிறைவேறக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியது. இயேசு
எரிகோவின் வழியாக செல்கிறார் என்ற செய்தியே அது.
அவர் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த நாளும் நேரமும் வந்தது இயேசு
எரிகோவின்வழியாக வருகிறார் ஆனால் சகேயுவால் இயேசுவைக் காணமுடியவில்லை. அவரது
கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு திரள்கூட்டமான ஜனங்களின் ஊர்வலம் மட்டுமே. இந்த
திரள்கூட்டமான ஜனங்கள் யார்? அவர்களில் சிலர்மட்டும்தான் இயேசுவின் சீடர்கள்
பெரும்பாலானோர் பல்வேறு நோக்கங்களுக்காக இயேசுவைப் பின்தொடர்பவர்கள். தங்கள்
வியாதி நீக்கப்படுவதற்காக பின்தொடர்பவர்கள். இயேசுவின் பிரசங்கத்தை கேட்க
செல்லும்கூட்டம் என பலதிறத்தார் காணப்பட்டனர் எது எப்படியாயினும் இயேசுவைப்
பின்பற்றுபவர்களால் சகேயுவுக்கு இயேசு மறைக்கப்பட்டார்.
இங்கு நாம் கவனிக்கவேண்டியவிஷயம் ஒன்று உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக/பல்வேறு
தேவைகளோடு இயேசுவை பின்பற்றும் ஒரு திரள்கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் உண்டு.
ஒருநிமிடம் யோசித்துப்பாருங்கள் சகேயுவின் கண்களுக்கு என்ன தெரிந்திருக்கும்..?
சப்பாணிகள், பிச்சைக்காரர்கள், குருடர்கள்..etc என ஒரு
பெருங்கூட்டம் அவர் கண்களுக்கு தெரிந்திருக்கும். இயேசுவைப் பின்பற்றுபவர்களில்
பெரும்பாலானோர் இயேசுவை அல்ல தங்கள் சுயத்தையே பிரதிபலிக்கின்றனர். இன்று
பெரும்பாலான சகோதரர்கள் இயேசுவின் அருகில் வர இயலாமைக்கு காரணம் நம்மவர்கள்
இயேசுவைப் பிரதிபலிக்காமையே…!
சமீபத்தில் ஒருவர்
வேடிக்கையாகக் கூறிய ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. அந்த மனிதர் தமது
சுற்றுவட்டாரத்தில் வாழும் சாட்சியற்ற கிறிஸ்தவர்கள் சிலரைச் சுட்டிக்காட்டி “இவங்க எல்லாரும் பரலோகத்துக்குத் தான் போவார்கள் என்றால்
அந்த பரலோகத்துக்கு நான் வரல்ல பிரதர்…!” என்றாராம்.
காட்டத்தி மரத்தில் சகேயு |
இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே நீங்கள்
இயேசுவைத்தான் பின்பற்றுகிறீர்கள்..! நல்லது. உங்கள் சுபாவங்களால்
இயேசுவைப் பிரதிபலிக்கிறீர்களா? அல்லது இயேசுவைப் பிறர் அறிந்துகொள்ளமுடியாதபடி
மறைக்கிறீர்களா? நீங்கள் பிறரை
இயேசுவண்டைக் கொண்டுவருகிறீர்களா? அல்லது இயேசுவை காணவிரும்புகிறவர்களுக்கு இடறலாக
இருக்கிறீர்களா? சிந்தித்துப்பாருங்கள்…! இதை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை இயேசுவை அறிந்துகொள்ளவிரும்பினால் நற்செய்திநூல்களை வாசியுங்கள். அதன் அடிப்படையில்
கர்த்தரை நோக்குங்கள். ஆவிக்குரிய சபை ஒன்றில் ஜக்கியத்தை
ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தேவன்தாமே நேர்வழியில் உங்களை நடத்துவாராக.
"சகேயு" - இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கு கிளிக்கவும்
"சகேயு" - இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கு கிளிக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக