அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். என்று நீதிமொழிகள் 23:11 சொல்லுகிறது. முந்தய வசனத்தை வாசிக்கும்போது திக்கற்ற பிள்ளைகளுக்காக வழக்காடுவார் என அறியமுடிகிறது. திக்கற்றபிள்ளைகள் என்பதற்கு ஆதரவற்றவர்கள்; அநாதைகள்; பெற்றோரில்லாதவர்கள் என்று பொருள். அவர்களுக்கு எதிராக யாரேனும் எழும்பி அவர்கள் பொருட்களை உடமைகளை அபகரித்துக்கொண்டால் நியாயமாக கிடைக்கவேண்டியதை தடுத்தால் தமதாக்கிக்கொண்டால் அவர்கள் சார்பில் நின்று பேசவோ நியாயம் கேட்கவோ யாருமே காணப்படுவதில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது அவர்களுடைய மீட்பர் வல்லமையுள்ளவர்.
இந்த வசனம் அநியாயமாக ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அவர்களை ஒடுக்குபவர்களுக்கோ எச்சரிப்பின் சத்தமாகவும் இருக்கிறது. கர்த்தருக்கு மதவேறுபாடு இல்லை; ஜாதி வேறுபாடு இல்லை; இனவேறுபாடு இல்லை. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி (சங் 7:11) அநியாயமாக ஒடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சார்பாக வழக்காடுபவராக காணப்படுகிறார்.
நாமும்கூட சில நேரங்களில் ஆதரவற்ற சூழ்நிலைகளின் வழியாக கடந்து செல்லக்கூடும். அதிகாரம் மிக்க நபர்கள் நம்மீது குற்றம் சுமத்தும்போது அது தவறான குற்றச்சாட்டு என்று தெரிந்தாலும்கூட யாரும் நமக்காக பேசுவதில்லை. செல்வாக்குமிக்கவர்கள் செய்யும் அநியாயத்தைகூட ஆதரிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்படுபவர்களின் நிலையை சற்றும் சிந்திப்பதில்லை *சகோதரனே.! சகோதரியே.! நீங்கள் ஒடுக்கப்படும் நிலையில் இருப்பவர்களா.!? நீங்கள் யாருமற்ற அநாதை என்று எண்ணி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். சர்வ வல்லமையுள்ள தேவன் நேரடியாக வந்து உங்களுக்காக வழக்காடும் அளவுக்கு நீங்கள் செல்வாக்குமிக்கவர்கள். நீங்கள் அற்புதத்தை காண்பீர்கள்.* அநியாயமாக மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களுக்கு வேதம் சொல்லும் எச்சரிப்பு '...தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்..' (அப் 5:39)
சிந்தனைக்கு:-

- தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்-68:5
- நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல் 3:5)
- விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள். (யாத் 22:22-24)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக