Translate

உங்கள் வெற்றியைத் தடுப்பது எது...? Part-II




ஆகான் செய்த ஒரு தவறு; தேவன் எடுக்கவேண்டாம் என்று கூறியதை எடுத்துக்கொண்டது (பாபிலோனிய சால்வை) என்றால் மற்றொரு தவறு தேவனுக்கு கொடுக்கவேண்டியதை (தங்கம் மற்றும் வெள்ளி) தேவனுக்கு கொடுக்காமல் தமக்கென்று எடுத்துக் கொண்டதாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தேவன் கூறுவதால் அவை தேவனுக்குரியவை என அர்த்தம் கொள்ளலாம். 

இன்றும்கூட கவனித்து பார்ப்பீர்களென்றால், ஆகான் செய்த அதே பாவங்கள்  வேறு வேறு வடிவங்களில் கிறிஸ்தவ சமுதாயத்தில் இழையோடியுள்ளதை காணலாம். சகோதர சகோதரிகள் அதன் வீரியத்தை அறியாதவர்களாக அவற்றை செய்தும் வருகின்றனர். அன்று ஆகான் தேவனுக்கு கொடுக்க வேண்டிய பொன் மற்றும் வெள்ளியை எடுத்து ஆக்கினையை அடைந்தான். இன்று நமது சகோதரர்கள் தமது அறியாமையால் அல்லது நிர்விசாரத்தால்
  • தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமை/ கனம்.
  • தேவனுக்காக செலவிடப்படவேண்டிய நேரம்.
  • தேவன் கட்டளையிட்டுள்ள காணிக்கைகள்.
  • தேவனுக்கு செய்த பொருத்தனைகள்.  முதலியவற்றை தேவனுக்கு செலுத்தாமல் தமக்கென்று எடுத்துக்கொள்ளும்  அல்லது  மறந்துவிடும் போக்கு காணப்படுகிறது.

தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமை/ கனம்.
      தேவன் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைதருவது உண்டு. அதன் காரணர் தேவன், அவரே மகிமைக்கு பாத்திரர் என்பதை மறந்து என்னுடைய பலத்தால், என்னுடைய பணத்தால், என்னுடைய செல்வத்தால், என்னுடைய செல்வாக்கால் என தேவனுடைய இரக்கத்தை கொச்சைப்படுத்தி தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமையை தனிமனிதன் அபகரித்துக்கொள்வதை குறிக்கிறது.   ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்,  தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமையை செலுத்தாமல் இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். (தானி 4:30) இதனால் ஏழு ஆண்டுகள் சுயநினைவற்று புல்லை தின்னவேண்டிய நிலை ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


தேவனுக்கு செலுத்தவேண்டிய நேரம்

தற்போதைய போட்டிநிறைந்த உலகில் ஞாயிற்றுகிழமையும் வேலை செய்தால்தான் அல்லது  Tuition / Special class சென்றால் தான் முன்னேறமுடியும் என்று நினைத்தால் அதுமிகவும்தவறு. சிறந்த ஆய்வு அல்லது கண்டுபிடிப்புக்காக  அதிகமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் யூதர்கள் அவர்கள் ஓய்வுநாளை மீகத்தீவிரமாக  ஆசரிப்பவர்கள். அதிக சம்பளம் கொடுத்தாலும் ஓய்வுநாளில் பணிபுரிய  மறுத்துவிடுவார்களாம்.  நம்மவர்கள் 10/12 படிக்கும் மணவர்கள் இருப்பின் ஞயிற்றுக்கிழமையில் தான் 4 subject க்கும் Tuition க்கு அனுப்பமுடியும் என்ற அரிய உண்மையை அறிந்தவர்களாதலால் மேற்கொண்டு கூற எதுவுமில்லை.

வேதம் சொல்லுகிறது,  சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபி 10:25)


தேவனுக்கு செலுத்தவேண்டிய காணிக்கைகள்

 காணிக்கை, தசமபாகம்  கட்டளைகள் புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு உண்டா? என்பது சிலருடைய சந்தேகம், இன்னும் சிலர் முகநூல் பக்கங்களில் பெரும் போராட்டமே  நடத்துகின்றனர்.
சரி இதைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?
           வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (மத் 5:20) 

வேதபாரகர் பரிசேயர் செய்தது என்ன ?

     பரிசேயர்- திருடுதல், அநியாயம் செய்தல், விபசாரம்செய்தல் ஆகியவை பாவம் என்று அறிந்திருந்தனர். மேலும் வரத்தில் இரண்டுமுறை உபவாசித்தனர். அவர்களது அனைத்து சம்பாத்தியத்திலும் தசமபாகம் செலுத்தினர். மேலும் தான தர்மங்களும் செய்துவந்தனர்.  (Ref: லூக் 18:10-12)
             …….., நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.(லூக் 11:42)




தேவனுக்கு செய்த பொருத்தனைகள்
       பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். - (நீதி 20:25) 
   நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். - (பிர 5:4) 


----------    ----------    ----------   ----------   ----------   ----------    ---------- 

கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.  சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.  கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
- (சங் 96:4-8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக