ஆபிரகாமின் சந்ததிகளான இஸ்ரவேலர்கள் 400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வசித்தனர். குறிப்பிட்ட காலம் வந்தபோது கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைத்தருளினார். ஓரேப் என்னும் கன்மலையில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த மேசேயிடம் முட்செடியில் பற்றியெரிந்த அக்கினியின் நடுவிலிருந்து பேசி அவனை எகிப்துக்கு சென்று தம்முடைய மக்களை விடுவிக்கும்படி பணித்தார். அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தவனாக அவருடைய சத்தத்துக்கு கீழ்படிந்து எகிப்துக்கு கடந்துசென்றான் எந்த ஆயுதங்களின் துணையுமின்றி அடிமைகளாக இருந்த ஆறுலட்சம் ஜனங்களை விடுவித்தவனாக திரும்பிவந்தான்.
*எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் எகிப்துக்கு சென்றான் தெரியுமா?*
மேசே 40 ஆண்டுகள் எகிப்திய இளவரசனாக வாழ்ந்தவன்; எகிப்திய இராணுவம்; பயிற்சிபெற்ற போர்வீரர்கள்; இருப்புரதங்கள்; குதிரை வீரர்கள்; ஆயுதங்களின் எண்ணிக்கை; அரசனுக்கு ஆலோசனை வழங்கும் ஞானிகள்; உறுதுணையாக இருக்கும் மந்திரவாதிகள்; இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவனை கொலை செய்ய தேடின பார்வோன். *சூழ்நிலைகள் எதுவுமே அவனுக்கு சாதகமாக இல்லை. ஆனாலும் அவன் கர்த்தருடைய வார்த்தையை நம்பியவனாக ஓரே ஒரு கோலுடன் ஒரு மாபெரும் பேரரசை எதிர்க்க புறப்பட்டான்; வெற்றியும் பெற்றான்.* வேதம் சொல்லுகிறது "விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்"... (லூக் 1:45)
சிந்தனைக்கு:-
...கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். (1சாமு 15:22

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக