பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் ராஜாவிடத்தில் பேசும்போது எகிப்திலிருந்து அணியணியாக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்களை காண்டாமிருகத்துக்கு ஒப்பிடுகிறார். (எண்; 23:22)
யோபு புத்தகம் காண்டாமிருகத்தின் பண்புகளை பின்வருமாறு பட்டியலிடுகிறது, "காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ?" (யோபு 39:9-10) காண்டாமிருகம் ஒருபோதும் மனிதர்களின் விருப்பம் என்ன என்று ஆராய்ந்து அதன்படி செயல்படுவதில்லை. மாறாக தன் தலை என்னசொல்லுகிறதோ அதன்படியே செயல்படுகிறது. மேலும் வேதம் இவ்வாறு சொல்லுகிறது "கிறிஸ்து சபைக்குத் தலை...." -(எபே 5:23)
சகோதரனே.! சகோதரியே.! கர்த்தரை தலையாக கொண்ட நாம் அவர் சித்தம் என்னவோ அதை செய்ய கடமைப்பட்டவர்கள். யாரோ சிலர் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காகவோ நமக்கு ஏதோ சிலவகையில் இழப்பு ஏற்படும் என்பதற்காகவோ சத்தியத்தை சத்தியமாக போதிக்காவிடில் கிறிஸ்துதான் நமக்கு தலையாக இருக்கிறாரா அல்லது மனிதர்கள் நமக்கு தலையாக இருக்கிறர்களா?
சிந்தனைக்கு:-

- கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.(கொலோ 2:18)
- இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. (கலா 1:10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக