இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்துவதைக் கண்ட வேதபாரகர்கள்; அவர் எவ்வாறு பிசாசுகளைத் துரத்துகிறார் என்பதைக்குறித்து சில கருத்துக்களைக் கூறினர். அவர்களுக்கு பதிலளிக்கும்விதமாகவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்க தாகத்தோடு வந்திருக்கும் தேவஜனங்களுக்கும் நிழல்போல் அவரை பின்தொடரும் சீடர்களுக்கும் எளிதில் புரியும்படியாகவும் உவமை வடிவில் பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். (மாற் 3:27) என்பதாக இயேசு கூறினார்.
அதன் அர்த்தமாவது *ஒருவன் பலவானாகிய பிசாசின் பிடியிலிருப்பவர்களை விடுவிக்கவேண்டுமென்றால் அவன் அந்த பலவானாகிய பிசாசை ஜெயித்தவனாக காணப்படவேண்டும். அவ்வாறு ஜெயித்தவனாக காணப்படும்போது அவன் பிசாசினால் அடிமைப்படுத்தப்பட்டு பிசாசின் உடைமைகளாக மாறிவிட்டவர்களை அவனது ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பவனாக மாறலாம்.* பல வியாதியஸ்தர்களிடமிருந்த பிசாசுகளை இயேசு கிறிஸ்து துரத்தியபோது அந்த பிசாசினால் அவர்களுக்கு வந்த வியாதி அவர்களை விட்டு நீங்கியது. (மாற் 9:25)
*பாவமற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து நமக்கு ஓர் சிறந்த மாதிரியை காண்பித்த நம் அருள்நாதர் பிசாசை எப்படி வெற்றிகொண்டார் தெரியுமா?* மத்தேயு 4:3-17 வரையான வசனங்களை வாசிக்கும்போது. பிசாசின் சோதனையை தேவனுடைய வசனத்தால்/ தேவனுடைய வசனத்தை கைக்கொண்டதால் ஜெயித்தார் என அறியமுடிகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் ...வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன்... வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். (1யோவா 2:13-14) என தனது நிருபத்தில் கூறுகிறார்.
*சகோதரனே.! சகோதரியே.! பிசாசை ஜெயிக்கவேண்டுமென்றால் வேதவசனத்தை கடைபிடிப்பவர்களாக அதன்மூலமாக ஆவியில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.* நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவா 15:7)
சிந்தனைக்கு:-

- விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள் (மாற் 16:17)
- வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத் 10:8)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக