Translate

திமிங்கலத்தின் வயிற்றில் யோனா, கற்பனை சம்பவம் அல்ல...!


    பொதுவாக, வேதாகமம் வரிக்கு வரி தேவனுடைய வார்த்தை என நிரூபிக்கும் சான்றுகள் புதிய அகழ்வாய்வுகள், அறிவியல் ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகளின்போது வெளிப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்துவது உண்டு. தற்போது ஒரு அன்றாட செய்தியும் அந்தவரிசையில் சேர்ந்துள்ளது. 

        யோனா தீர்கத்தரிசி நினிவே என்ற பகுதிக்குச் செல்லாமல்   தேவனுடைய  கட்டளைக்கு மாறாக  தர்ஷீஸ்-க்கு செல்லும்படி கப்பல் ஏறினார், இதனால் கடலில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு கப்பல் மூழ்கும் நிலைக்குச் சென்றது. அக்கால மாலுமிகளின் வழக்கப்படி இந்த நிலைக்கு யார் காரணம் என சீட்டு போட்டு பார்க்கப்பட்டது. அதில் யோனாவின் பெயர் வரவே அவரிடம்; அவர் யார்எங்குசெல்கிறார்?  என விசாரித்தனர். யோனா உண்மை எதையும் மறைக்கவில்லை...! ,மேலும் கப்பலைக் காப்பாற்ற தன்னைத் தூக்கி கடலில் போடும்படி ஆலோசனையும் கொடுத்தார்அவரது ஆலோசனையின்படி அவரைத் தூக்கி கடலில் போட்டவுடன் கடல் அமைதியடைந்தது. கடலில் போடப்பட்ட அவரை, ஒரு ராட்சத திமிங்கலம் விழுங்கிவிட்டதுஅந்த திமிங்கலம் அவரை மூன்று நாட்களுக்கு பிறகு நினிவே கடற்கரையில் வெளியேற்றிவிட்டு சென்றது.
      
         யோனா தீர்கத்தரிசியின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம்  உண்மை என இறைமறுப்பாளர்கள் வெகுகாலமாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தனர். இறைமறுப்பாளர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக திமிங்கலம் விழுங்கிய மனித கை மீட்கப்பட்டு மறுபடியும் பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று கூறப்படுவது உண்டு, ஆனால் தற்போது யோனாவின் வாழ்வில் நடந்த நிகழ்வை மிகவும் ஒத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.

               
ஒரு ராட்சத திமிங்கலம்

(05-04-2016 தினத்தந்தி செய்தி)

               ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அவர் மோசமான வானிலை காரணமாக மாயமானார். உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால்  ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய ராட்சத திமிங்கலக் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்ததாகவும் பின்பு அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

மீனவர் லுயிகி மார்கியூஸ்
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

                நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான். நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார். இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார். நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன். இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

  
மேலதிக தகவல்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக