விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சென்னார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவா 8:3-11)
ஆபிரகாமின் குமாரத்தியான ஸ்திரி; தேவனிடத்திலிருந்து வாக்குத்தத்தங்களை பெற்ற சந்ததி; ஏதோ காரணங்களினால் பாவத்தில் வீழ்ந்துவிட்டது. இன்று அவள் மேசேயின் கட்டளைப்படி கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவளாக நின்று கொண்டிருக்கிறாள். மோசேயைவிட பெரியவரான, நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவிடம் வந்தபோது; அவருடைய இரக்கம் அவள்மீது பிரகாசித்தபோது; அவளை குற்றம்சுமத்தியவர்கள் கொலைசெய்ய காத்திருந்தவர்கள் யாவரும் பின்வாங்கி சென்றுவிட்டனர். அவள் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.
சகோதரனே.! சகோதரியே.! கொலைக்கு நியமிக்கப்பட்ட பாவியான ஸ்திரீயை விடுவித்த அதே இயேசு பாவத்தின் பிடியிலிருந்து; பாவ பழக்கவழக்களிலிருந்து; மரணக்கட்டுகளிலிருந்து; மரணபயத்திலிருந்து; வியாதியின் கொடூரத்திலிருந்து; உன்னை நெருக்கிக்கொண்டிருக்கும் சகலவிதமான போராட்டங்களிலிருந்து உன்னை விடுவிக்க வல்லவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆனால் பாவியான ஸ்திரிக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த அன்புக் கட்டளை ஒன்று உண்டு இனிப் பாவஞ்செய்யாதே என்பதே அது. அல்லேலூயா.!
சிந்தனைக்கு:-

- கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். (சங் 102:19)
- ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவா 8:36)