நாற்பது
ஆண்டுகள் எகிப்திய இளவரசனாக , ஏறக்குறைய 35 ஆண்டுகள் பார்வோனின் வீட்டில் வளர்ந்த மோசே; தான்மட்டுமல்லாது தலைமுறை தலைமுறையாக தனது
வாரிசுகளும் அரசகுடும்பத்தினராக வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் தனக்கு
முன்பாக இருந்தபோதும் அதை தெரிந்துகொள்ளாமல் அடிமைப்பட்டுகிடந்த
தனது சகோதரர்களுக்கு உதவமுயன்றார். அதன்பயனாக
எகிப்தின் சுகபோக வாழ்க்கையை விட்டு
வனாந்திரத்துக்கு சென்று ஆடுமேய்கும் நிலைக்கு
தள்ளப்பட்டார். பின்னாட்களில் அவர் தேவனால் சந்திக்கப்பட்டு
எகிப்துக்கு திரும்பிவந்து தனது சகோதரர்களை விடுவித்து
கானானை நோக்கி வழிநடத்தும்படியாக தேவன்
அவரை வல்லமையாக பயன்படுத்தினார்.
மோசேயின்
பெற்றோர் இருவருமே இஸ்ரவேலர்கள். தேவனை அறிந்தவர்கள். ஏறக்குறைய
5 ஆண்டுகள் மோசே தனது பெற்றோரால்
வளர்க்கபட்டிருக்ககூடும். தான் யார் என்பதை
அறிந்துகொண்ட மோசேயை அதற்கு பின்
வந்த 35 ஆண்டுகால கல்விமுறையோ சுகபோக வாழ்க்கையோ துளியும்
மாற்றிவிடமுடியவில்லை.
சகோதரனே.!
சகோதரியே.! நீங்கள் ஒருவேளை 'என்
பிள்ளைகள் இந்த பாவம் நிறைந்த
உலகில் வாழப்போகிறார்களோ..?' என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கக்கூடும். கலங்கவேண்டாம்..!!!. வேதம் சொல்லுகிறது 'உன்
பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம்
பெரிதாயிருக்கும்.-(ஏசா 54:13)'
சிந்தனைக்கு:-
உன் கண்கள் கண்ட காரியங்களை
நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம்
அவைகள் உன் இருதயத்தை விட்டு
நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச்
சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும்
உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.- (உபா 4:10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக