Translate

உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது யார்?



ஆசாரியன் ஏலியின் பிள்ளைகள் சாமுவேலில் ஒரு அனாதை சிறுவனை பார்த்திருக்கக்கூடும்.!  ஆனால்  தேவனோ அவனில் இஸ்ரவேலர்களின் வரலாற்றின் போக்கையே  தீர்மானிக்கும் தேவமனிதனை; மாபெரும் தீர்க்கதரிசியை;  ராஜாக்களை அபிஷேகிக்கும் தனது பிரதிநிதியை பார்த்தார்

*உங்களைப்பற்றி மற்றவர்களோ நீங்களோ நினைப்பது அல்ல உங்கள் எதிர்காலம். இயேசு கிறிஸ்து உங்களைப்பற்றி என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ  அதுதான் உங்கள் எதிர்காலம்.*  

கலங்காதிருங்கள் இயேசு உங்களை கைவிடமாட்டார்.

(ஏசாயா- 55:8, 9)  என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். *பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக