மோசேயின் முற்கால வரலாறு அவரை சாந்த குணம் உடையவராக நமக்கு அறிமுகப்படுத்தவில்லை; மாறாக ஒரே அடியில் ஒருமனிதனை கொலை செய்த ஓர் எகிப்திய இளவரசனாகத்தான் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால் 'மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.' என்று எண்ணாகமம் 12:3 சொல்லுகிறது.
எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?. இளவரசராக வாழ்ந்த
மோசே கொலையாளியாக எகிப்தைவிட்டு தப்பியோடும்போது அவருக்கு வயது நாற்பது; பிந்ததைய நாற்பது வருடம் அவர் ஒரு குடும்பஸ்தனாகவும் ஆட்டுமேய்ப்பராகவும் வாழ்ந்த எளிய வாழ்க்கை அவருக்கு பொறுமையையும் சாந்தகுணத்தையும் வெகுவாக கற்றுக்கொடுத்திருந்தது. அந்த நல்லகுணங்கள் அவருக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த எந்த மனிதனுக்கும் இல்லாத சிறப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. மோசேயை குறித்து தேவனே சொல்லுகிறதாவது 'என் தாசனாகிய மோசேயோ .... என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்;.' (எண்; 12:7-8)
சகோதரனே.! சகோதரியே..!
நம் வாழ்க்கையில் பலவிதமான சோர்வுகள், தோல்விகள், ஏமற்றங்கள் வரும்போது சோர்ந்துபோகாமல் நம்பிக்கையுடன் கர்த்தருக்கு காத்திருப்போம். சில
சூழ்நிலைகள் மூலமாக நாம் நம்முடைய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான நற்பண்புகளை வலிமையை தேவன் நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஏற்றகாலத்தில் அவர் நம்மை நிறைவான ஆசீர்வாதங்களுடன் சந்திப்பார்.
வேதம் சொல்லுகிறது ' இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசா 40:30)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக