இயேசு கிறிஸ்து
தனது ஊழிய
பயணத்தின் இறுதியாக
எருசலேம் நகருக்குச்
செல்லும்போது தனது
சீடர்களை அனுப்பி
குறிப்பிட்ட கிராமத்திலிருந்து
கட்டப்பட்டிருந்த ஓர்
கழுதைக்குட்டியை அவிழ்த்துவரச்செய்து
அதன்மீது ஏறி
எருசலேம் நகருக்குள்
பிரவேசித்தார். அநேகர்
தங்கள் வஸ்திரங்களை
வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர்
மரக்கிளைகளைத் தறித்து
வழியிலே பரப்பினார்கள்.
அவற்றின்மீது நடந்தபடியே
ஓசன்னா! கர்த்தரின்
நாமத்தினாலே வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்ற
விண்ணைமுட்டும் கோஷங்களோடு
கர்த்தரை சுமந்துகொண்டு
அந்த கழுதை
எருசலேமுக்குள் பிரவேசித்தது.
இன்றும்கூட அந்த
கழுதை சுவிஷேச
பிரசங்கங்களில் அதிகமாக நினைவுகூறப்படுகிறது. பல
தேவமனிதர்கள் தங்களையே
அந்த கழுதையுடன்
ஒப்பிட்டு மகிழ்வதைக்கூட
காண்கிறோம். அந்த
கழுதையின் அடையாளம்(identity) அதன்
பிறந்த இடமோ
வளர்ந்த இடமோ அதன் தனிப்பட்ட
திறமைகளோ அல்ல.
மாறாக அதன்மீது
பயணம்செய்த இயேசு
கிறிஸ்துவே அதன்
அடையாளம்(identity). ஒவ்வொரு விசுவாசிக்கும்
ஒவ்வொரு தேவமனிதனுக்கும்
அவர்களில் வசிக்கும்
கிறிஸ்துவின் ஆவியானவரே
அவர்கள் அடையாளம்(identity).
வேதம் சொல்லுகிறது, நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி
உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும்
அறியாதிருக்கிறீர்களா? ...... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த
ஆலயம். (1கொரி 3:16-17) நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்... (1கொரி 3:23) அண்டசராசரங்களையும் படைத்து
ஆளுகை செய்யும்
சர்வ வல்லமையுள்ள
தேவன் நம்மில்
வசிக்கும்போது நமக்கு
சிறப்பைத்தருவது அல்லது
நமக்கு அடையாளத்தைத்
தருவது நமது
இனமா? மொழியா?
ஜாதியா? அல்லது
தேவனின் அருகாமையா?
தேவனே நம்முடைய
அடையாளம்..! God is Our
Identity
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக