ஜலப்பிரளயத்துக்கு பின்பு அரராத் மலையின்மீது தங்கிய பேழையில் அனைத்து உயிரினங்களும் அடைந்துகிடந்த நேரத்தில் நோவா ஓர் காகத்தைமட்டும் வெளியே அனுப்பினார்.அது காலையில் வெளியே செல்வதும் மாலையில் வருவதுமாக இருந்ததே தவிர பேழையில் இருந்த யாருக்கும் எந்தவிதமான பிரயோஜனமான தகவலையும் கொண்டுவரவில்லை.ஆனால் சில நாட்களுக்கு பின்பாக அனுப்பப்பட்ட புறா பூமியின்மீது தாவரங்கள் வளர்ந்துவிட்டது என்ற பிரயோஜனமான தகவலை கொண்டுவந்தது. அதன்பயனாக பேழைக்குள் இருந்த அனைவரும் வெளியேறி நிலத்தில் கால்வைத்தனர்.
இயேசு கிறிஸ்துவின்மூலமாக கிடைக்கும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பலர் குறுகியமனப்பான்மையுடன் மற்றவர்களைப்பற்றிய கரிசனையில்லாமல் வாழ்ந்துவருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் குறுகியமனப்பான்மையை விட்டு கிறிஸ்துவின் குணநலன்களை பிரதிபலிப்பதுடன் மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பை அறியும்படி அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக திகழ தேவன்தாமே கிருபை அருள்வாராக.
சிந்தனைக்கு:-
⧫அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத் 28:18-20)
⧫அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.........அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். (1யோவா 2:3,6)
⧫அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். (1யோவா 3:24)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக