வடக்கு
விர்ஜீனியாவின் கான்ஃபெட்ரேட் இராணுவத்தின் புகழ்பெற்ற தலைவர் ராபர்ட் லீ ஒருமுறை
தனது படைவீரர்கள் சிலருடனும் அதிகாரிகளுடனும் ரயிலில் போய்க் கொண்டிருந்தார். ரயில்
ஏதோ ஒரு ரயில்நிலையத்தில் நின்றபோது ஒரு ஏழைப்பெண்மணி ஒருத்தி இவர்கள் இருந்த பெட்டியில் ஏறினாள். அந்த
பெட்டியில் காலி இருக்கை ஏதுமில்லை. மட்டுமல்ல எவருமே
அவளுக்காக எழுந்து இடம்கொடுக்கவும் இல்லை இதனால் அந்த ஏழைப் பெண்மணி பரிதாபமாக
நின்றுகொண்டே பயணம்செய்துகொண்டிருந்தார். திடிரென லீ எழுந்து தனது இருக்கையை
அந்த ஏழைப் பெண்ணுக்கு கொடுத்தார். தங்கள்
தலைவரின் செயலால் அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அவசரகதியில் எழுந்து
தங்கள் இருக்கையை லீ க்கு அளிக்க முன்வந்தனர். அவர்களிடம் லீ சொன்னார்
"வேண்டாம் கனவான்களே ஒரு ஏழை பெண்ணுக்கு இருக்கையை வழங்க இயலாத
உங்களிடமிருந்து எனக்காக ஒரு இருக்கையை பெற நானும் விரும்பவில்லை". இந்த சம்பவத்தில் அழகான ஆவிக்குரிய உண்மை ஒன்று மறைந்திருக்கிறது.
இறைவனுக்காக
எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்ய மக்கள் ஆயத்தமாக உள்ளனர். இன்று வானளாவ கட்டப்படும் ஆலயங்களும்
கோபுரங்களும் முழுக்கமுழுக்க திருச்சபை மக்களின்
சொந்த பணத்தில் கட்டப்படுபவை என்பதே இதற்கு சான்று. ஆனால் இறைவன்
தனது மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் அல்லது அவர்கள் எதை செய்ய வேண்டுமென்று
விரும்புகிறார்? வேதம் இதைப்பற்றி என்ன சொல்லுகிறது…?
(அப் 7:48-50 கூறுகிறது)………… உன்னதமானவர் கைகளினால்
செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும்
பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட
வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள்
எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா ……...
அப்படியானால் கைகளினால்
செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிராத உன்னதமானவர் எங்கு
வாசமாயிருக்கிறார்…? (1கொரி 3:16,17 கூறுகிறது) நீங்கள்
தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில்
வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்
கெடுத்தால்,
அவனைத்
தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே
அந்த ஆலயம்.
திருச்சபை மக்கள்
ஓரிடத்தில் கூடிவரவும் தேவனை ஆராதிக்கவும் கட்டிடங்கள் நிச்சயமாக தேவையே... ஆனால்
உயர்ந்த கோபுரங்களுக்காக செய்யப்படும் ஆடம்பரச்செலவுகளை தேவன் விரும்புவாரா? என திருச்சபையினர் சிந்திக்கவேண்டும். இயேசுகிறிஸ்து கூறிய ஒரு உவமை இங்கு நினைவு கூறத்தக்கது, அது பின்வருமாறு.
அன்றியும்
மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது
மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல
ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை
அவர் பிரித்து,
செம்மறியாடுகளைத்
தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும்
நிறுத்துவார். (மத்
25:31-33)
இங்கு இரண்டு
கூட்டத்தினருமே ஆடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். ( ஆடுகள் என்பதை
திருச்சபையினர் என அர்த்தம் கொள்ளலாம்)
செம்மறி
|
செம்மறி ஆடுகள் என்பது (இயேசு) மேய்ப்பனின் கட்டளைக்கு அப்படியே செவிகொடுக்கும் மக்களை குறிக்கிறது.
வெள்ளாடு |
வெள்ளாடுகள் என
குறிப்பிடப்பட்டவர்கள் மேய்ப்பனின்(இயேசு)
கட்டளைக்கு செவிகொடுக்காமல் பெயரளவில்
கிறிஸ்தவர்களாக வாழ்ந்து தேவன் விரும்பும் வாழ்க்கை வாழாதவர்கள். பசியாயிருப்பவர்களுக்கு
போஜனம் கொடுத்தல், தாகமாயிருப்பவர்களின்
தாகம் தீர்த்தல், அந்நியரை
உபசரித்தல், வஸ்திரமில்லாதவர்களுக்கு உதவிசெய்தல்; துயரத்திலிருப்பவர்களை
விசாரித்தல். இவையெல்லாம் நம்முடைய கடமை என்பதை அவர்கள்
அறியாதவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது பேச்சு வெளிப்படுத்துகிறது. ஆலயத்துக்கு
நன்கொடை கொடுத்தல் இறையியல் பட்டம் பெற்றிருத்தல் அற்புதங்கள் அடையாளங்களுடன்
ஊழியம் செய்தல் எல்லாம் நல்லதுதான் தேவன் விரும்பும் இரக்ககுணமும் பிறன்மேல்
அன்பும் இல்லாமல் வாழ்ந்தால் வெள்ளாடுகளின் கூட்டதில்தான் காணப்படமுடியும்.
நீங்கள் செம்மறி
ஆடா…? வெள்ளாடா …?
சிந்தனைக்கு:-
- என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசி 8:12)
- நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசி 4:6)
- வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. (நீதி 28:9)
- (லூக் 6:27) உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
- (லூக் 6:31) மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
- (லூக் 6:35) உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்;
- (லூக் 6:36) ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
- (லூக் 6:37) மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்;…….. மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், ………. விடுதலைபண்ணுங்கள், …….
- (லூக் 6:38) கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; .
- (மத் 12:50) பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக