Translate

நீங்கள் இயேசுவா?


     ஒரு சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையாளர்கள் சிலர் குழுவாக சிக்காகோவில் உள்ள ஒரு விற்பனை நிலையத்திற்கு சென்றுவிட்டு விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்று நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்வதாக அவர்கள் அவரக்ளுடைய மனைவிகளுக்கு வாக்களித்திருந்தனர். ஆகவே அவசரமாக நடந்து போய்க்கொண்டிருந்தனர். விமான நிலைய வாசலின் ரோட்டோரம் கண் தெரியாத 16 வயது சிறுமி ஒருவள், ஆப்பிள் பழங்களை விற்று வந்தாள்.

     விற்பனையாளர்களில் ஒருவர் அவசரத்தினால், அந்த பெண் வழியில் வைத்திருந்த ஆப்பிள் கூடையை அறியாமல் தட்டி விட்டார். ஆப்பிள்கள் அங்குமிங்குமாக சிதறின. ஆனாலும் அவர்கள் யாரும் நிற்காமல் தங்களுடையே விமானத்திற்கு வந்து ஏறினர். அனால் அந்த செயல் விற்பனையாளர்கள் குழுவில் இருந்த ஒரு கிறிஸ்துவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த கிறிஸ்துவ வியாபாரி தனது நண்பர் செய்த செயலுக்காக வருந்தினார். மேலும் அந்த ஆப்பிள் விற்பனை செய்கிற கண் தெரியாத பெண்ணுக்காக இரக்கப்பட்டார்.


     தன்னுடைய நண்பர்களை தான் இல்லாமல் செல்லுமாறு கையசைத்துவிட்டு, தன்னுடயை நண்பர்களில் ஒருவரிடம் அங்கு நடந்ததை அவருடைய மனைவிக்கு விளக்கி சொல்லுமாறு கூறினார். மேலும் அவர் அடுத்த விமானத்தில் வருவதாக சொல்லி விட்டு, கண் தெரியாத அந்த சிறுமியின் இடத்திற்கு விரைந்தார். அந்த சிறுமி சிதறிய ஆப்பிள்களை தடவி தடவி கூட்ட நெரிசலில் பொறுக்கிக்கொண்டு இருந்தாள். அந்த வழியாய நடந்து சென்ற யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை. அந்த வியாபாரி அந்த பெண்ணுடன் கீழே அமர்ந்து ஆப்பிள்களை எடுத்து அதை அழகாக அடுக்கி வைத்தார்.

     நிறைய ஆப்பிள்கள் அடிபட்டு இருந்ததை கண்டு அதை வேறு ஒரு கூடையில் எடுத்து வைத்தார்.பின்னர் அந்த அடிபட்ட பழங்களுக்காக 40 டாலர்களை கொடுத்தார். அதற்கு அந்த பெண் தனக்கு பணம் வேண்டாமென்று தலையை அசைத்தால். ஆயினும் எங்களால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது என்று சொல்லி அந்த பணத்தை கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினார். அப்பொழுது அந்த பெண் அவரை நோக்கி நீங்கள் இயேசுவா?” என்று கேட்டாள். அதற்கு அந்த கிறிஸ்துவ வியாபாரி திகைத்து போனார். அவர் அவளிடம் திரும்ப வந்து, நான் அவரை போல ஒன்றுமில்லை. இயேசு நல்லவர். அன்புமிகுந்தவர், இரக்கம் நிறைந்தவர் என்று சொன்னார். அதற்கு அந்தப்பெண் நான் இயேசுவிடம் உதவிக்காக ஜெபித்தேன். அப்பொழுது நீங்கள் உதவினீர்கள். ஆகவே தான் நீங்கள் இயேசுவா?” என்று கேட்டேன் என்று கூறினாள். இயேசு உங்களை வைத்து எனக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன். உங்களுக்கும் எனது நன்றி என்று கூறினாள்.

     கிறிஸ்துவ வியாபாரி அந்த பெண்ணிடமிருந்து விடைபெற்று தனது அடுத்த விமானத்தை நோக்கி நடந்தார். அவருடைய செவிகளில் நீங்கள் இயேசுவா?” என்ற கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. எத்தனையோ நாட்கள் பிறருக்கு உதவாமல் இயேசுவைப்போல வாழாதமைக்காக வருந்தினார். அன்றைக்கு தான் இயேசுவைப்போல பிறருக்கு உதவி செய்து வாழ தன்னை அர்ப்பணித்தார். இயேசுவைப் பின்பற்றுவது என்பது வேதம் வாசிப்பது மற்றும் சபைக்கு செல்வது மட்டும் அல்ல பிரியமானவர்களே. அவரைப்போல ஒவ்வொரு நாளும் வாழ்ந்து காட்டுவது தான். அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் (I யோவான் 2:5-6) வேதாகம் கூறுகின்றது. இயேசுவைப்போலவே நீங்களும் பிறரை நேசித்து, உதவி செய்து வாழ ஆயத்தமாக இருகின்றீர்களா?

Originally Posted by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக