மேற்க்கத்திய நாடுகளில்
நிறவெறி தலைவிரிதாடிக் கொண்டிருந்த நேரம்.
நிற வெறியின் கொடுமைகளை முகமுகமாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த கறுப்பின
சிறுவன் தன் உறவினர்களுடன் அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு விழாவை
பார்க்க சென்றிருந்தான். அங்கு வண்ண வண்ண பலுன்களை ஒரு வியாபாரி குழந்தைகளுக்கு
விற்றுக் கொண்டிருந்தார். பணக்கார குழந்தைகள் பெற்றோரின் உபயத்தால் பலுன்களை வாங்கி
வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
கறுப்பின சிறுவன்
ஆச்சரியத்துடன் பலூன்கள் வானில் சென்று மறைவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது
பார்வை இப்போது பலூன்காரர் பக்கமாக திரும்பியது. அவரிடம் கறுப்புநிற பலூன்களும்
இருந்தது ஆனால் அதை குழந்தைகள் யாரும் வாங்கவில்லை. தீவிர யோசனைக்குபின்பு
பலுன்காரரின் அருகில் சென்ற அந்த சிறுவன் கறுப்பு நிற பலூனை காட்டி, இந்த பலூன் உயரமாக பறக்குமா என
அப்பாவியாக கேட்டான். அவனது கேள்வியின்
பொருளை புரிந்துகொண்ட அந்த இரக்ககுணமுடைய பலூன்காரர் ஒரு கருப்புநிறமுடைய பலூனை அவிழ்த்து வானத்தில் விட்டார்.
அந்த சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஓடிச்சென்று உறவினர்கள் நண்பர்களை அழைத்து கறுப்புநிற
பலூன் உயரத்தில் பறப்பதைக்காட்டி மகிழ்ந்தான். பின்பு ஏதோ நியாபகம் வந்தவனாக பலூன்காரரை நோக்கி சென்று நன்றிதெரிவித்தவன் அவரிடம், “நான் ஒருபோதும் கறுப்புநிற பலூன் வானத்தில் பறக்கும் என்று நினைக்கவே இல்லை” என்றான். பலூன்காரர் அவனைப்
பார்த்து புன்னகைத்தபடி கூறினார். “தம்பீ...!
நிறத்தில் எதுவும் இல்லை பலூனின் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாயுதான்
அதை பறக்கச்செய்கிறது”.
நம்மில் சிலரும்
இப்படித்தான் எனக்கு அழகு இல்லை, படிப்பு இல்லை, உடல் வலிமை இல்லை, பேச்சு திறமை இல்லை நான் எப்படி வழ்க்கையில் முன்னுக்கு வரப் போகிறேன். என தழ்வு மனப்பான்மையுடன் காணப்படுகின்றனர். உங்களிடம் எந்த தகுதியும் இல்லாவிட்டாலும்
இயேசப்பா உங்ககூட இருந்தால் போதும் நீங்களும் வெல்லலாம்.
நீங்களும் வெல்லலாம் உங்கள் உள்ளத்தில் இயேசு இருந்தால்...!!!
வேதம் சொல்லுகிறது...
- கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; (1நாளா 29:11)
- கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. (சங் 75:6)
- குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும; ஜெயமோ கர்த்தரால் வரும். (நீதி 21:31)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக