"மாற்றம்" - என்பது அன்றுமுதல் இன்றுவரை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும் ... ஏன்
ஒவ்வொரு நிமிடமும் கூட
ஒவ்வொருவருடய வாழ்க்கையிலும்
தவிற்க இயலாத அல்லது தடுக்க இயலாத செயலே. வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நம்மை மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்துவதாக இருப்பதில்லை அவற்றில் சில நம்மை வேதனை / விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்வதாகவும்
அமைந்துவிடுவது உண்டு. மனதால் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத அப்படிப்பட்ட மாற்றங்கள் தான் "ஏமாற்றங்கள்".
ஏமாற்றங்கள் என்பது நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமான ஒன்று ஆகையால் ஏமாற்றம் அடைந்த
ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்
என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை.
- நீங்கள்
மிகுந்த வேதனை அல்லது அவமானத்தை கொண்டுவந்த
(ஏ)மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில்
சந்தித்திருக்கிறீர்களா?
- நிகழ்காலமே கேள்விக்குறியாக மாறிவிட்டதே என நொந்து போய் இருக்கும் நான் எதிர் காலத்தை குறித்து என்ன கனவு காணமுடியும் என்று நினைகின்றீர்களா ?
உங்கள் கேள்வி எதுவாக இருந்தாலும்
பதில் ஒன்றே ஒன்றுதான். முடியும் என்று ஒரே வரியில் சொல்வதைவிட பலவிதமான
ஏமாற்றங்களை வெற்றிகண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் உங்களுக்கு அதை விளக்க
விரும்புகிறேன். நெடுங்காலத்திற்கு முன்பு யோசேப்பு என்று ஒரு சிறுவன் இருந்தான்.
அவன் தன் தந்தைக்கு மிகவும் பிரியமானவன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் யாருமே
எதிர்பாராத வகையில் அவரது வாழ்க்கை படகு தடுமாறத் துவங்கியது.
யோசேப்பு அடிமையாக விற்க்கப்படல் |
- தன்னை மிகவும் நேசிக்கும் தந்தையின் கண்டனத்துக்கு ஆளானார்.
- சொந்த சகோதரர்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளானார்.
- சகோதரர்களின் கையாலே கொல்லப்படுவதற்க்கான சூழ்நிலைகள் உருவானது. பின்பு தண்ணீர் இல்லாத கிணற்றில் தள்ளப்பட்டார்.
- அவர் மிகவும் நம்பின அவருடைய சகோதரர்கள் அவரை 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்றுப்போட்டார்கள்.
- மறுபடியும் விற்ப்பனைக்கு (resale) ஆளானார்.
- அபாண்டமாக பழி சுமத்தப்பட்டார், பின்பு செய்யாத தவறுக்காக தண்டிக்கப்பட்டார்.
- உதவி செய்வார்கள் என்று நம்பியவர்கள் கூட முற்றிலுமாக மறந்துவிட்ட நிலை ஏற்பட்டது.
அவருடைய வாழ்க்கையில் இத்தனை
வேதனைகள் வந்தபோதும் அவர் யாரையும்
குறைகூறவில்லை. ஆனால் அவர் ஒன்றே ஒன்று செய்தார் ... அந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு
முன்பாக உண்மை உள்ளவராக இருந்தார் .குறித்த
காலம் வந்தபோது ஆண்டவர் அவருடைய வாழ்கையை முற்றிலுமாக மாற்றினார். எந்த இடத்தில் அவர் அடிமை ஆக விற்கப்பட்டரோ அதே இடத்தில் அரசருக்கு நிகரான அதிகாரம் உள்ளவராக மாற்றப்பட்டார். இப்போது...
- யார் யார்
அவரை கொலைசெய்ய முயன்றார்களோ..!
- யார் யார்
அவரை படுகுழிக்குள் தள்ளினர்களோ ...!
- யார் யார்
அவரை அடிமையாக விற்றார்களோ..!
- யார் யார் அவரை அபாண்டமாக குற்றம்சாட்டினார்களோ..!
அனைவரும் அவருடை தயவை நாடி வரவேண்டிய
நிலையை ஆண்டவர் உருவாக்கினார் . நீங்களும் கூட உங்கள் வாழ்கையில் மிகுந்த ஏமாற்றங்களையும் வேதனைகளையும் சந்தித்திருக்கலாம்.
ஆண்டவர் உங்கள் வாழ்வை மாற்ற விரும்புகிறார். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அவருடைய
வார்த்தைகளுக்கு கீழ்படிவது மட்டுமே..!
Good message...
பதிலளிநீக்குThank you bro, May God Bless you...
நீக்கு