Translate

சத்தியம்பண்ணவேண்டாம்...!

இயேசு கிறிஸ்து தமது ஊழிய பயணத்தின்போது ஒருமுறை திரளான ஜனங்களை பார்த்து   " நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  பரிச்சேதம்  சத்தியம் பண்ண வேண்டாம் வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்;  அது   தேவனுடைய   சிங்காசனம். பூமியின் பேரிலும்  சத்தியம் பண்ண வேண்டாம்,   அது  அவருடைய  பாதபடி;   எருசலேமின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம்,  அது  மகா ராஜாவினுடைய  நகரம்;  உன்  சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம்,  அதின்  ஒரு  மயிரையாவது  வெண்மையாக்கவும்  கறுப்பாக்கவும்  உன்னால் கூடாதே. உள்ளதை  உள்ளதென்றும்,  இல்லதை   இல்ல தென்றும்  சொல்லுங்கள்;  இதற்கு மிஞ்சினது   தீமையினால்   உண்டாயிருக்கும்.    "  (மத்தேயு 5:34-37)   என்று  கூறினார்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் தங்கள் இறைவன் மீதும் எருசலேம் நகரத்தின் மீதும் எருசலேமில் உள்ள தேவாலயத்தின் மீதும் சத்தியம் பண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வாறு சத்தியம் செய்த பலர் அவர்கள் சத்தியம் செய்தவற்றை நிறைவேற்றாமல் போவதும், சத்தியத்தை மீறிவிடுவதும் உண்டு. இத்தகைய செயல்களால் உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கா திருப்பாயாக” (யாத்திராகமம்-20:7) என்ற கட்டளையை மீறி தேவனுடைய தண்டனைக்கு ஆளாகினர். இதனால்தான் சத்தியம் செய்ய வேண்டாம் என்று அந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்து அறிவுரை கூறினார்.  இன்றும் கூட அனைவரும் உண்மையை மட்டுமே பேசுவார்கள்  என்றால்   சத்தியம் செய்தல்   என்ற செயலுக்கு தேவையே இருப்பதில்லையே...! 



 இந்த கூற்றை உதாரணத்துடன் விளக்குவதாக இருந்தால்  பின்வரும் விளக்கம் சிறப்பாக இருக்கக்கூடும். இந்த உலகில் பறவைகள் எதற்குமே சிறகுகள் இல்லை அவை அனைத்துமே குதித்து குதித்துதான் செல்கிறது என்று கற்பனை செய்து கொண்டால்  பறவை  என்ற  சொல்லுக்கும்  பறத்தல் என்ற  சொல்லுக்கும் தேவையே இருந்திருக்காதுஉண்மையுள்ள இறைவனாகிய இயேசு கிறிஸ்து தன் இரத்தத்தால் சொந்தமாக்கிய மனிதர்கள் அனைவரும் உண்மையையே பேச அருள் புரிவாராக.

5 கருத்துகள்: