Translate

இதற்க்கு விளக்கங்கள் தேவையில்லை...!!!

[யாத்திராகமம் - 20:3-5]
         என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம், உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

[ஏசாயா- 42:8]

         நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

[ஏசாயா- 42:17]

 சித்திரவேலையான விக்கிரகங்களைநம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களைநோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

[ஏசாயா- 44:10,11-21]
ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?


  கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான், பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான், தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குத் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான், அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.

       அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான், ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான், அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான், நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான், அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான், ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

   அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான், ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆ ஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி, அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

     அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன், அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன், அதில் மீதியான துண்டைநான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை, அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.அவன் சாம்பலை மேய்கிறான், வஞ்சிக்கப்பட்டமனம் அவனை மோசப்படுத்தினது, அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.




யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
சிந்தைனைக்கு :
[உபாகமம்-4:15] கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
[யோவான்-4:24] தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் .


குறிப்பு : வேதவசனங்கள் மட்டும் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக