Translate

நீங்கள் இயேசுவா?


     ஒரு சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையாளர்கள் சிலர் குழுவாக சிக்காகோவில் உள்ள ஒரு விற்பனை நிலையத்திற்கு சென்றுவிட்டு விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்று நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்வதாக அவர்கள் அவரக்ளுடைய மனைவிகளுக்கு வாக்களித்திருந்தனர். ஆகவே அவசரமாக நடந்து போய்க்கொண்டிருந்தனர். விமான நிலைய வாசலின் ரோட்டோரம் கண் தெரியாத 16 வயது சிறுமி ஒருவள், ஆப்பிள் பழங்களை விற்று வந்தாள்.

     விற்பனையாளர்களில் ஒருவர் அவசரத்தினால், அந்த பெண் வழியில் வைத்திருந்த ஆப்பிள் கூடையை அறியாமல் தட்டி விட்டார். ஆப்பிள்கள் அங்குமிங்குமாக சிதறின. ஆனாலும் அவர்கள் யாரும் நிற்காமல் தங்களுடையே விமானத்திற்கு வந்து ஏறினர். அனால் அந்த செயல் விற்பனையாளர்கள் குழுவில் இருந்த ஒரு கிறிஸ்துவருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த கிறிஸ்துவ வியாபாரி தனது நண்பர் செய்த செயலுக்காக வருந்தினார். மேலும் அந்த ஆப்பிள் விற்பனை செய்கிற கண் தெரியாத பெண்ணுக்காக இரக்கப்பட்டார்.


     தன்னுடைய நண்பர்களை தான் இல்லாமல் செல்லுமாறு கையசைத்துவிட்டு, தன்னுடயை நண்பர்களில் ஒருவரிடம் அங்கு நடந்ததை அவருடைய மனைவிக்கு விளக்கி சொல்லுமாறு கூறினார். மேலும் அவர் அடுத்த விமானத்தில் வருவதாக சொல்லி விட்டு, கண் தெரியாத அந்த சிறுமியின் இடத்திற்கு விரைந்தார். அந்த சிறுமி சிதறிய ஆப்பிள்களை தடவி தடவி கூட்ட நெரிசலில் பொறுக்கிக்கொண்டு இருந்தாள். அந்த வழியாய நடந்து சென்ற யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை. அந்த வியாபாரி அந்த பெண்ணுடன் கீழே அமர்ந்து ஆப்பிள்களை எடுத்து அதை அழகாக அடுக்கி வைத்தார்.

     நிறைய ஆப்பிள்கள் அடிபட்டு இருந்ததை கண்டு அதை வேறு ஒரு கூடையில் எடுத்து வைத்தார்.பின்னர் அந்த அடிபட்ட பழங்களுக்காக 40 டாலர்களை கொடுத்தார். அதற்கு அந்த பெண் தனக்கு பணம் வேண்டாமென்று தலையை அசைத்தால். ஆயினும் எங்களால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது என்று சொல்லி அந்த பணத்தை கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினார். அப்பொழுது அந்த பெண் அவரை நோக்கி நீங்கள் இயேசுவா?” என்று கேட்டாள். அதற்கு அந்த கிறிஸ்துவ வியாபாரி திகைத்து போனார். அவர் அவளிடம் திரும்ப வந்து, நான் அவரை போல ஒன்றுமில்லை. இயேசு நல்லவர். அன்புமிகுந்தவர், இரக்கம் நிறைந்தவர் என்று சொன்னார். அதற்கு அந்தப்பெண் நான் இயேசுவிடம் உதவிக்காக ஜெபித்தேன். அப்பொழுது நீங்கள் உதவினீர்கள். ஆகவே தான் நீங்கள் இயேசுவா?” என்று கேட்டேன் என்று கூறினாள். இயேசு உங்களை வைத்து எனக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன். உங்களுக்கும் எனது நன்றி என்று கூறினாள்.

     கிறிஸ்துவ வியாபாரி அந்த பெண்ணிடமிருந்து விடைபெற்று தனது அடுத்த விமானத்தை நோக்கி நடந்தார். அவருடைய செவிகளில் நீங்கள் இயேசுவா?” என்ற கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. எத்தனையோ நாட்கள் பிறருக்கு உதவாமல் இயேசுவைப்போல வாழாதமைக்காக வருந்தினார். அன்றைக்கு தான் இயேசுவைப்போல பிறருக்கு உதவி செய்து வாழ தன்னை அர்ப்பணித்தார். இயேசுவைப் பின்பற்றுவது என்பது வேதம் வாசிப்பது மற்றும் சபைக்கு செல்வது மட்டும் அல்ல பிரியமானவர்களே. அவரைப்போல ஒவ்வொரு நாளும் வாழ்ந்து காட்டுவது தான். அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் (I யோவான் 2:5-6) வேதாகம் கூறுகின்றது. இயேசுவைப்போலவே நீங்களும் பிறரை நேசித்து, உதவி செய்து வாழ ஆயத்தமாக இருகின்றீர்களா?

Originally Posted by

இயேசப்பா உங்ககூட இருந்தால் போதும் நீங்களும் வெல்லலாம்.


மேற்க்கத்திய நாடுகளில் நிறவெறி தலைவிரிதாடிக் கொண்டிருந்த நேரம்.  நிற வெறியின் கொடுமைகளை முகமுகமாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த கறுப்பின சிறுவன் தன் உறவினர்களுடன் அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு விழாவை பார்க்க சென்றிருந்தான். அங்கு வண்ண வண்ண பலுன்களை ஒரு வியாபாரி குழந்தைகளுக்கு விற்றுக் கொண்டிருந்தார். பணக்கார குழந்தைகள் பெற்றோரின் உபயத்தால் பலுன்களை வாங்கி வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.


கறுப்பின சிறுவன் ஆச்சரியத்துடன் பலூன்கள் வானில் சென்று மறைவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது பார்வை இப்போது பலூன்காரர் பக்கமாக திரும்பியது. அவரிடம் கறுப்புநிற பலூன்களும் இருந்தது ஆனால் அதை குழந்தைகள் யாரும் வாங்கவில்லை. தீவிர யோசனைக்குபின்பு பலுன்காரரின் அருகில் சென்ற அந்த சிறுவன் கறுப்பு நிற பலூனை காட்டி, இந்த பலூன் உயரமாக பறக்குமா என அப்பாவியாக கேட்டான். அவனது கேள்வியின் பொருளை புரிந்துகொண்ட அந்த இரக்ககுணமுடைய பலூன்காரர் ஒரு கருப்புநிறமுடைய பலூனை அவிழ்த்து வானத்தில் விட்டார். 


 அந்த சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஓடிச்சென்று உறவினர்கள் நண்பர்களை அழைத்து கறுப்புநிற பலூன் உயரத்தில் பறப்பதைக்காட்டி மகிழ்ந்தான். பின்பு ஏதோ நியாபகம் வந்தவனாக பலூன்காரரை நோக்கி சென்று நன்றிதெரிவித்தவன் அவரிடம், நான் ஒருபோதும் கறுப்புநிற பலூன் வானத்தில் பறக்கும் என்று நினைக்கவே இல்லை என்றான்.  பலூன்காரர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி கூறினார். தம்பீ...! நிறத்தில் எதுவும் இல்லை பலூனின் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வாயுதான் அதை பறக்கச்செய்கிறது”.


நம்மில் சிலரும் இப்படித்தான் எனக்கு அழகு இல்லை, படிப்பு  இல்லை, உடல் வலிமை இல்லை, பேச்சு திறமை இல்லை நான் எப்படி வழ்க்கையில் முன்னுக்கு வரப் போகிறேன். என தழ்வு மனப்பான்மையுடன் காணப்படுகின்றனர்.  உங்களிடம் எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் இயேசப்பா உங்ககூட இருந்தால் போதும் நீங்களும் வெல்லலாம்.


நீங்களும் வெல்லலாம் உங்கள் உள்ளத்தில் இயேசு இருந்தால்...!!!



வேதம் சொல்லுகிறது...

  • கர்த்தாவேமாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்;  (1நாளா 29:11)
  • கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. (சங் 75:6)
  • குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும; ஜெயமோ கர்த்தரால் வரும். (நீதி 21:31)

மாவீரன் அலெக்சாண்டர் - தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள்


பரிசுத்த வேதாகமத்தில் மேசியாவின் இரண்டாம் வருகை வரையிலான பெரிய அரசுகளைப் பற்றியும் அவைகளின் எழுச்சி செயல்பாடுகள் வீழ்ச்சியை பற்றியும் விளக்கமாக கூறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மாவீரன் அலெக்சாண்டரின் கிரேக்க சாம்ராஜ்யமும் அடங்கும். இது அலெக்சாண்டர் ஆட்சிக்கு வருவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு  முன்னமே,  அதாவது கி.மு. 534- ல் தானியேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்டதாகும். பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்த தீர்க்கதரிசன வார்த்தை பின்வருமாறு.

(தானி 11:2-4) …… இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.  அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.

அலெக்சாண்டர்: சுருக்கமான வரலாறு

அலெக்சாண்டர் கிமு 356 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் நாள் மாசிடோனிய அரசர்  பிலிப்புக்கும் ஒலிம்பியாசுக்கும் மகனாக பிறந்தார். அலெக்சாண்டரின் தந்தை அவருக்கு கல்வி போதிக்க மிகச்சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலை  நியமித்தார். அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு கல்வி போதித்து அவரை  வல்லுனராக மாற்றினார்.. தன்னுடன் அரியணைக்கு போட்டியிட்ட அனைவரையும் வென்று கி.மு 336- ல் தன் 20 ஆம் வயதில் அரியணை ஏறினார்.


கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனியாவில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக  புறப்பட்ட அலெக்ஸாண்டரின் படையானது தற்காலத்து துருக்கி, சீரியா, இஸ்ரேல், லெபனான், எகிப்து, லிபியா, இராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட வடஇந்தியாவின் சில பகுதிகளையும் வென்றது. இவ்வாறு சென்றவிடமெங்கும் வெற்றியை மட்டுமே ருசித்த அலெக்சாண்டர், மேலும் முன்னேறி செல்ல படைவீரர்கள் விரும்பாததால் தமது நாட்டுக்கு திரும்பினார். திரும்பும் வழியில் . கி.மு.323-ல் ஜூன் 10 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் பாபிலோனிலுள்ள இரண்டாம் நேபுகாத்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். அவரது இறப்புக்கு பிறகு அவரது அரசு அவரது படைத்தலைவர்களால் நான்காக பிரிக்கப்பட்டது.


அலெக்சாண்டரின் போர் பயணம்

தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள்

* பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.  * 

கோரேஸ்,காம்பீஸஸ், கிஸ்டாஸ்பஸ் என்ற மூன்று பெர்சிய அரசர்களுக்கு அடுத்தபடியாக அரசை ஆண்ட நாலாவது அரசனான செர்சஸ் கிரேக்க அரசின்மீது படையெடுத்தான். ஆனால் சாலாமிஸ் என்ற இடத்தில் கி.மு 480-ல் தோற்கடிக்கப்பட்டார். அந்த நிகழ்வுக்கு பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய அலெக்சாண்டரால் அதன் புகழ் கொடிகட்டிப் பறக்கத்துவங்கியது. வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அலெக்சாண்டர் தான் அந்த பராக்கிரமமுள்ள ஒரு ராஜா என அறியலாம்.


*அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்*

அலெக்சாண்டரின் இறப்புக்கு பிறகு அவரது அரசு அவரது படைத்        தலைவர்களால் நான்காக பிரிக்கப்பட்டது.

1.தாலமி – எகிப்து, யூதேயா, சீரியாவின் சில பகுதிகள்.

2.டிசலூக்கஸ் நிக்கொதார்- சீரியாவின் சில பகுதிகள், பாபிலோனியா       முதல் இந்தியா வரை.

3.லைசிமாக்கஸ்-ஆசியா மைனர்.

4.காசாண்டர்- கிரேக்கம், மக்கதோனியா.


* ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.*

(தாலமி, டிசலூக்கஸ் நிக்கொதார், லைசிமாக்கஸ் ,காசாண்டர்) இவர்கள் யாரும் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களோ சந்ததியினரோ அல்ல. இவர்களில் ஒருவரும் முறைப்படியான அரசுரிமைக்கு உரிமையுள்ளவர்கள் அல்ல.



 *     *     *     *     *     *     * 

தேவன் சொல்லுகிறார்...
 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது… (எசே 12:25)

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள். (அப் 2:17-18) 
 *     *     *     *     *     *     * 

இந்தியாவின் அப்போஸ்தலர் 'தோமா'


இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர்களான பன்னிருவரில் ஒருவர்தான் தோமா. திருச்சபை பாரம்பரிய செய்திகளின் அடிப்படையில் இவரது முழு பெயர் 'யூதா தோமா' என்பதாகும். இயேசு கிறிஸ்து பரமேறி சென்றபிறகு தேற்றரவாளனாம் தூய ஆவியால் நிரப்பபட்ட சீடர்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும்  சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். என்ற தம் தலைவராம் இறைமைந்தனின் கட்டளையை சிரமேற்று உலகமக்களை பாவ இருளிலிருந்து விடுவிக்க நற்செய்தி என்னும் ஒளியை பல்வேறு நாடுகளுக்கு கொண்டுசென்றனர். சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அறிவொளியடைந்தனர். அந்தவகையில் பல்வேறு நாடுகளில் நற்செய்தியை அறிமுகப்படுத்திய தோமா AD 52-ல் கடல் மார்க்கமாக சேரநாட்டின் (தற்போதைய கேரளா) முசிறி பகுதிக்கு வந்தார். [பிற்காலத்தில் பல்வேறு நிலவியல் மாற்றங்களை சந்தித்த  சேரநாட்டின் புகழ்பெற்ற முசிறி துறைமுகம் தற்போது கொடுங்ஙல்லூர் என்று அழைக்கப்படுகிறது]     

மலபார் (கேரள) பகுதிக்குவந்த தோமா ஆயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். தம் இனத்தவரான யூதர்கள் அங்குவசிப்பதை கண்டு அவர்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார். பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர். முசிறிக்கு அருகிலுள்ள பாலையூர் பகுதியில் தோமா போதிக்கும்போது சில பிராமணர்கள் தோமாவின் போதனையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த வேறுசில பிராமணர்கள் அவ்வூரைவிட்டு வெளியேறியதுடன் அவ்வூருக்கு சாப்பாக்காடு (சாபமான இடம்) என்றும் பெயரிட்டனர். பின்பு இவர்கள் சற்று தொலைவிலுள்ள வெம்மனாடு என்ற பகுதியில் குடியேறினர்.

தமது போதனையை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பிய மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து அவர்களுக்காக சபைகளையும் நிறுவினார் தோமா. மலபார் பகுதியில் அவர் ஏழு சபைகளை நிறுவியதாக குறிப்புகள் உள்ளன. அந்த ஏழு இடங்களாவன.

  • முசிறி (கொடுங்ஙல்லூர்)
  • பள்ளுர்
  • பரூர் (கோட்டக்காவு)
  • கோத்தமங்ஙலம்
  • காயல்
  • நிரணம்
  • கொல்லம்
மேற்கண்ட பகுதிகளில் மட்டுமல்லாது மலையாற்றூர்  போன்ற பல சிறிய ஊர்களிலும் அப்பேஸ்தலர்  தோமா பணியாற்றியதற்கு சான்றுகள் உள்ளன.  பின்பு திருவிதாங்கோடு பகுதிக்கு வந்த தோமா அங்கும் ஒரு ஆலயத்தை கட்டி பலருக்கு திருமுழுக்கு கொடுத்துவிட்டு AD 65-ல்  கொரமண்டல் பகுதிக்கு (தற்போதைய சென்னை) சென்றார். 

தோமா கட்டிய தேவாலயம், திருவிதாங்கோடு,
 
கன்னியாகுமரி மாவட்டம் 

சாந்தோம் பேராலயம், சென்னை
மயிலாப்பூரை அடைந்த தோமா சின்னமலை (இன்றைய சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ளது) மற்றும் சற்று தொலைவில் உள்ள பெரியமலை பகுதிகளில் மக்களுக்கு போதனை செய்தார். தோமா மற்றும் அவர்காட்டும் மர்க்கத்தின் செல்வாக்கு மயிலை மக்களிடம் பெருகுவதை கண்ட காளிகோயில் பூசாரிகள் எரிச்சலடைந்தனர். பொய் குற்றச்சாட்டுகள்மூலம் அரசரிடம் தண்டனை பெற்றுத்தர இயலாததால் நேரடியாக செயலில் இறங்கினர். இறுதியாக AD 72-ல் பெரியமலை பகுதில் வைத்தது களிகோயில் பூசாரிகளால் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாக மரணம் அடைந்தார்.

தோமாவின் சீடர்கள் அரசரின் அனுமதியுடன் அவரது உடலை மைலாப்பூரில் நல்லடக்கம் செய்தனர். தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மகாதேவன் என்ற மன்னரின் உத்தரவுப்படிஒரு பெரிய நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. அங்கு தற்போது இருக்கும் சாந்தோம் பேராலயம் 1896-ல் கட்டப்பட்டது. தோமா ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தம் வாய்மொழியாக கூறிய வார்த்தைகள் இங்கு நினைவு கூறத்தக்கது. “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்”. (யோவா 11:16) என்பதே அது. தம் உயிரினும்மேலாக சுவிசேஷத்தை எண்ணிய அவரது வாழ்வு நிச்சயமாக அகில உலக கிறிஸ்தவர்களுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  


-Dr.ராஜேந்திரபிரசாத்


"ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே புனித தோமா இந்தியாவுக்கு வருகை புரிந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல ஜரேப்பிய நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் முந்தைய வரலாறு புனித தோமா வழிவந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இது நாம் உண்மையில் பெருமை  கொள்ளத்தக்க செய்தியாகும்." 




-Dr.ராஜேந்திரபிரசாத் (இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்)




- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

உங்கள் வெற்றியைத் தடுப்பது எது...? Part-II




ஆகான் செய்த ஒரு தவறு; தேவன் எடுக்கவேண்டாம் என்று கூறியதை எடுத்துக்கொண்டது (பாபிலோனிய சால்வை) என்றால் மற்றொரு தவறு தேவனுக்கு கொடுக்கவேண்டியதை (தங்கம் மற்றும் வெள்ளி) தேவனுக்கு கொடுக்காமல் தமக்கென்று எடுத்துக் கொண்டதாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தேவன் கூறுவதால் அவை தேவனுக்குரியவை என அர்த்தம் கொள்ளலாம். 

இன்றும்கூட கவனித்து பார்ப்பீர்களென்றால், ஆகான் செய்த அதே பாவங்கள்  வேறு வேறு வடிவங்களில் கிறிஸ்தவ சமுதாயத்தில் இழையோடியுள்ளதை காணலாம். சகோதர சகோதரிகள் அதன் வீரியத்தை அறியாதவர்களாக அவற்றை செய்தும் வருகின்றனர். அன்று ஆகான் தேவனுக்கு கொடுக்க வேண்டிய பொன் மற்றும் வெள்ளியை எடுத்து ஆக்கினையை அடைந்தான். இன்று நமது சகோதரர்கள் தமது அறியாமையால் அல்லது நிர்விசாரத்தால்
  • தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமை/ கனம்.
  • தேவனுக்காக செலவிடப்படவேண்டிய நேரம்.
  • தேவன் கட்டளையிட்டுள்ள காணிக்கைகள்.
  • தேவனுக்கு செய்த பொருத்தனைகள்.  முதலியவற்றை தேவனுக்கு செலுத்தாமல் தமக்கென்று எடுத்துக்கொள்ளும்  அல்லது  மறந்துவிடும் போக்கு காணப்படுகிறது.

தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமை/ கனம்.
      தேவன் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைதருவது உண்டு. அதன் காரணர் தேவன், அவரே மகிமைக்கு பாத்திரர் என்பதை மறந்து என்னுடைய பலத்தால், என்னுடைய பணத்தால், என்னுடைய செல்வத்தால், என்னுடைய செல்வாக்கால் என தேவனுடைய இரக்கத்தை கொச்சைப்படுத்தி தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமையை தனிமனிதன் அபகரித்துக்கொள்வதை குறிக்கிறது.   ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்,  தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமையை செலுத்தாமல் இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். (தானி 4:30) இதனால் ஏழு ஆண்டுகள் சுயநினைவற்று புல்லை தின்னவேண்டிய நிலை ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


தேவனுக்கு செலுத்தவேண்டிய நேரம்

தற்போதைய போட்டிநிறைந்த உலகில் ஞாயிற்றுகிழமையும் வேலை செய்தால்தான் அல்லது  Tuition / Special class சென்றால் தான் முன்னேறமுடியும் என்று நினைத்தால் அதுமிகவும்தவறு. சிறந்த ஆய்வு அல்லது கண்டுபிடிப்புக்காக  அதிகமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் யூதர்கள் அவர்கள் ஓய்வுநாளை மீகத்தீவிரமாக  ஆசரிப்பவர்கள். அதிக சம்பளம் கொடுத்தாலும் ஓய்வுநாளில் பணிபுரிய  மறுத்துவிடுவார்களாம்.  நம்மவர்கள் 10/12 படிக்கும் மணவர்கள் இருப்பின் ஞயிற்றுக்கிழமையில் தான் 4 subject க்கும் Tuition க்கு அனுப்பமுடியும் என்ற அரிய உண்மையை அறிந்தவர்களாதலால் மேற்கொண்டு கூற எதுவுமில்லை.

வேதம் சொல்லுகிறது,  சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபி 10:25)


தேவனுக்கு செலுத்தவேண்டிய காணிக்கைகள்

 காணிக்கை, தசமபாகம்  கட்டளைகள் புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு உண்டா? என்பது சிலருடைய சந்தேகம், இன்னும் சிலர் முகநூல் பக்கங்களில் பெரும் போராட்டமே  நடத்துகின்றனர்.
சரி இதைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?
           வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (மத் 5:20) 

வேதபாரகர் பரிசேயர் செய்தது என்ன ?

     பரிசேயர்- திருடுதல், அநியாயம் செய்தல், விபசாரம்செய்தல் ஆகியவை பாவம் என்று அறிந்திருந்தனர். மேலும் வரத்தில் இரண்டுமுறை உபவாசித்தனர். அவர்களது அனைத்து சம்பாத்தியத்திலும் தசமபாகம் செலுத்தினர். மேலும் தான தர்மங்களும் செய்துவந்தனர்.  (Ref: லூக் 18:10-12)
             …….., நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.(லூக் 11:42)




தேவனுக்கு செய்த பொருத்தனைகள்
       பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். - (நீதி 20:25) 
   நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். - (பிர 5:4) 


----------    ----------    ----------   ----------   ----------   ----------    ---------- 

கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.  சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.  கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
- (சங் 96:4-8)