Translate

யார் இந்த யோசேப்பு ...?

           ஆபிரகாமின் மகன் ஈசாக்கு அவரது மகனாகிய யாக்கோபின் பன்னிரண்டு மகன்களில் 11-ஆவது மகன் தான் யோசேப்பு, இவரது தாயின் பெயர் ராகேல். இஸ்ரவேலின் கோத்திரப்பிதாக்கள் என அடையாளப்படுத்தப்படும் ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன் மற்றும் பென்யமின் ஆகியோரே இவரது 11-சகோதரர்கள்.

            யோசேப்பின் மூத்த சகோதரர்கள் தந்தையின் ஆடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்டிருந்தனர்; அவரது தந்தை அவரது மற்ற குமாரர்களைவிட அவரை மிகவும் நேசித்தார், இதனால் அவருக்கு பல வருணங்களை உடைய ஒரு அங்கியை அவருக்கு செய்து கொடுத்தார். இந்த சூழ்நிலையில் யோசேப்பு சில சொப்பனங்களை கண்டார் அந்த சொப்பனங்களின் பொருள் யோசேப்பு தனது சகோதரர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார் /சகோதரர்களை ஆளுவார் என்பதாகக் காணப்படவே சகோதரர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

யோசேப்பு அடிமையாக  விற்க்ப்படல்
 ஒருமுறை அவர் அவரது சகோதரர்கள் ஆடு மேய்க்கும் பகுதியை பார்வையிட்டு அவர்களது சுக துக்கங்களை அறிந்து வரும்படி தமது தந்தையான யாக்கோபால் அனுப்பப்பட்டார். நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு ஒருவழியாக தோத்தான் என்னும் இடத்தில் தமது சகோதரர்களை கண்டார். அவர் தூரத்தில் வருவதை கண்ட சகோதரர்கள் அவருக்கு எதிராக சதியாலேசனை செய்தனர் எனினும் அவர்களுக்குள்; உடன்பாடு ஏற்படவில்லை. இறுதியாக யோசேப்பிடம் தந்தை கொடுத்து அனுப்பிய உணவு பதார்த்தங்களை பெற்றுக்கொண்டு அவரது  பலவருண அங்கியையும் பறித்துக்கொண்டு அவரை அருகிலிருந்த தண்ணீரில்லாத கிணற்றில் போட்டனர். பின்னர் அவ்வழியாக சென்ற வர்த்தகர்களிடம் இருபது வெள்ளிக்காசுக்கு அவரை விற்றுப்போட்டனர்.


               இப்போது யோசேப்பின் சகோதரர்களுக்கு ஒரு புது பிரச்சனை...! யோசேப்பை விற்றுவிட்டோம் ஆனால் தந்தைக்கு என்ன பதில் கூறுவது.? தீவிர ஆலோசனைக்கு பின்பு ஒரு ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு அதன் இரத்தம்  யோசேப்பின் பலவருண அங்கியில் தேக்கப்பட்டது அவர் காட்டுமிருகத்தால் கொல்லப்பட்டுவிட்டார் என அவரது தந்தை நம்ப வைக்கப்பட்டடார்.

               வர்த்தகர்கள் அவரை எகிப்து தேசத்துக்கு கொண்டுசென்று பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவரிடம் விற்பனை செய்தனர். மிகவும் உண்மையுள்ளவராக காணப்பட்ட அவர் சிறிது காலத்திற்கு பிறகு செய்யாத ஒரு தவறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.  சிறைச்சாலையில் இருந்த யோசேப்பு சக கைதிகளாக இருந்த முன்னாள் அரசு அதிகாரிகள் இருவர் கண்ட சொப்பனங்களின்; அர்த்தத்தை விளக்கிக் கூறினார். அது அவ்வாறே சம்பவித்தது. அதன்படி ஒரு அதிகாரி பழைய பணிக்கு திரும்பினார் மற்றவர் கொல்லப்பட்டார்.
      
               சிறிது காலத்திற்க்கு பின்பு எகிப்தின் மன்னரான பார்வோன் ஒரு சொப்பனம் கண்டார். அதன் பொருளை யாராலும் விளக்க முடியவில்லை யோசேப்பை குறித்து கேள்விப்பட்ட மன்னன் அவரை சிறைச்சாலையிலிருந்து வரவழைத்தார். யோசேப்பு  சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கினார்.அதன்படி 7 வருடம் கொடிய பஞ்சம் வரும் என்பதை அறிந்த மன்னன் அதிலிருந்து தற்காக்க யோசேப்பிடமே ஆலோசனையும் கேட்டான். யோசேப்பின் ஆலோசனையின்படி பஞ்சம் வருவதற்க்கு முந்தைய ஆண்டுகளின் அதிகப்படியான தனியம் எகிப்து நாடு முழுவதும் புதிய களஞ்சியங்கள் ஏற்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டது.

யோசேப்பு தன் சகோதரர்களை அடையாளங்கண்டுகொள்ளல்
               சொப்பனத்தின்படியான பஞ்சம் ஆரம்பமாகியது அது எகிப்து மட்டுமின்றி அண்டை நாடுகளையும் தாக்கியது. யோசேப்பின் சகோதரர்கள் உட்பட அண்டை நாட்டு மக்கள் அனைவரும் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தனர். யோசேப்பு தன் சகோதரர்களை அடையாளங்கண்டு அவர்கள் தனக்கு செய்த துரோகத்தை மறந்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் ஆதரித்தார். யோசேப்பின் வேண்டுகோளை ஏற்று அவரது தந்தை சகோதரர்கள் அவர்களது குடும்பத்தினர் என 70 பேர் எகிப்தின் வளமான பகுதியான கோசேன் நாட்டில் குடியேறினர். சிலகாலத்திற்க்கு பிறகு யாக்கோபு மரணமடைந்தார். அவரை ஆபிரகாம் ஈசாக்கு ஆகியோரது கல்லறையில் அடக்கம் செய்தனர். அவருக்காக எகிப்து முழுவதும் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.


               யோசேப்பு தான் மரணமடையும் நாட்கள் நெருங்குகையில் தன் சகோதரரை அழைத்து 'நிச்சயமாக ஒருநாள் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறி கர்த்தர் வாக்குபண்ணின நாட்டுக்கு கடந்து செல்லுவர் அப்போது எனது எலும்புகளையும் உடன் எடுத்து செல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். பின்நாட்களில் அவர் முன்னறிவித்தவாறே மோசே தலைமையில் இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு வெளியேறி கானான் நோக்கி பயணமாயினர்.

மேலும் தெரிந்துகொள்ள வாசிக்கவேண்டிய வேத பகுதிகள்:
ஆதியாகமம்-37 மற்றும் ஆதியாகமம்-37 முதல் 39 ஆம் அதிகாரம்வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக