இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நினைவுகூறுவதை காணும்போது கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவன்
என்றும் இறைமகன் என்றும் கூறும்
இயேசு ஏன் மரிக்கவேண்டும்...!!!???
என்ற கேள்வி சிலருக்கு எழக்கூடும். இந்த கேள்விக்கான பதில் முதல் மனிதனாகிய ஆதாமின் வாழ்க்கையில் அடங்கியுள்ளது.
இறைவன் தன்கரங்களால் மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கி சுவாசத்தை கொடுத்து அவனை உயிருள்ளவனாக மாற்றினார்; அவன் வசிக்கும்படி ஏதேன் என்னும் தோட்டத்தில் அவனை வைத்தார்; பிற்பாடு அவனுக்கு துணையாக ஒரு பெண்ணையும் உருவாக்கினார்; அவள்தான் முதல் பெண்மணியாகிய ஏவாள்.
மனிதனுக்காக பலவித கனிமரங்களையும் உருவாக்கி வைத்திருந்த இறைவன் ஒரே ஒரு கனியை மட்டுமே உண்ணவேண்டாம் என்று தடை செய்திருந்தார். (ஒருவேளை தகுந்த காலம் வரும்போது அதை அவனுக்கு உண்ண கொடுத்திருப்பார்). பிசாசு ஏவாளை ஏமாற்றியது அதனால் அவர்கள் இருவரும் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்தனர். அதன் பாதிப்பால் ஒட்டுமொத்த மனுக்குலமும் பாவத்துக்குள்ளாகியது. அதனால் ஆதாமின் மக்களாகிய நாமும் பாவிகளானோம்.
ஆதாம் செய்த பாவத்தினால் நான் எப்படி பாதிக்கப்பட முடியும் ? என்று ஒருவேளை சிலர் கேட்கலாம். ஒரே ஒரு ஓட்டுனரின் தவறால் 50 பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்; ஒரு ரயிலை இயக்குபவரின் தவறால் 500-1000 பேர் பாதிக்கப்படுகின்றனர்; ஒரு நாட்டை ஆளும் தலைவரின் தவறான முடிவுகளால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்; அதுபோல ஆதாமின் பாவத்தால் ஆதாமின் மக்களாகிய ஒட்டுமொத்த மனுக்குலமும் பவிகளாயினர்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. தன்னோடு யுகாயுகமாய் வசிக்கும்படி உருவாக்கப்பட்ட மனுக்குலத்தின் ஒட்டுமொத்த அழிவை பரமதகப்பனால் எவ்வாறு சகித்துக்கொள்ள இயலும்..!? ஆகவே பாவமற்ற ஒருவரின் மரணத்தால் அவர்களை மீட்க தீர்மானித்தார், அதன்படி இறைவன் இயேசு, மரியாள் என்னும் கன்னியின் வயிற்றில் மனிதனாக பிறந்தார்.
ஆதாம் என்ற ஒரே நபரின் பாவத்தின் பலனால் ஆதாமின் மக்களாகிய ஒட்டுமொத்த மனுக்குலமும் பாவிகளாகியதால் அதற்க்கான தண்டனையை அனைவரும்அடைய வேண்டும். ஆனால் பாவமே செய்யாத இறைவனாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்து ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீட்புக்காக மரித்தார். இதன்மூலம் மனுக்குலம் பாவத்திலிருந்து மீட்படைய வழி ஏற்பட்டது அதுவும் இலவசமாக...!, மீட்பை பெற்றுக் கொள்ள நாம் செய்யவேண்டியதெல்லாம் இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து அவர்காட்டிய பாதையில் வழ்வது மட்டுமே. இயேசு கிறிஸ்துவின்மூலம் மீட்பை பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் நம்மை எரிநரகத்துக்கு தப்புவித்துக்கொள்வதுடன் இறைவனுடன் பரலோகத்தில் யுகாயுகம் வாழும் தகுதியையும் பெறுகிறோம்.
- - -
- -
(யோவா 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
(அப் 16:31) .... கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
(மாற் 16:16)
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக