ISIS- என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்து குறிப்பிட்ட முறையிலான ஆட்சியை அமைக்க முயன்றுவருகிறது. இதன்பிடியில் சிக்கிய பகுதிகளில் வசித்த கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிலை என்னவென்பது நாம் நன்கு அறிந்ததே..! இந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து பழங்கால நினைவுச் சின்னங்கள் கிறிஸ்தவ மற்றும் சில இஸ்லாமிய புனித தலங்களாக கருதப்படும் கட்டிடங்களையும் அழித்துவருகிறது. ஆனால் சமீபத்தில் அவர்களை அறியாமலேயே பரிசுத்த வேதாகமத்தின் உண்மைத் தன்மையை மேலும் ஒருமுறை உறுதிசெய்ய உதவி நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.
The remains of the Tomb of Prophet jonaha, destroyed by Islamic State militants, in Mosul, Iraq |
ISIS- அமைப்பு ஈராக் நாட்டின் மொசுல் (Mosul) நகரை கைப்பற்றியபோது
அங்கிருந்த புராதான நினைவிடமான யோனா தீர்க்கதரிசியின் கல்லறையை தகர்த்தது. யோனா தீர்க்கதரிசி இறைவனின் கட்டளைப்படி நினிவே பகுதிக்கு சென்று இறைவனின் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்து அதன் மூலம் நினிவே பட்டணத்தின் அழிவைத் தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிறிஸ்தவர் யூதர் இஸ்லாமியர் ஆகிய மும்மத மக்களாலும் சிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படுபவர் ஆவார்.
சமீபத்தில் ISIS- அமைப்பு போராளிகள் மொசுல் நகரைவிட்டு ஈராக்கிய ராணுவத்தால் துரத்தப்பட்டனர் அதற்கு பின்பு தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அந்த இடத்தை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது தொல்லியல் ஆய்வின் பயனாக அவர்கள் ஆச்சரிய மூட்டும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினர். அந்த இடத்துக்கு அடியில் ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன்பு அசீரியாவை ஆண்ட சனகரீப் என்ற மன்னனின் அரண்மனையின் பகுதிகளை கண்டுபிடித்தனர். இந்த சனகரீப் மன்னர்தான் எசேக்கியா ராஜாவின் காலத்தில் எருசலேமை முற்றுக்கையிட்டவர். தீர்கதரிசி ஏசாயாவின் முன்னறிவிப்பின்படி போரிடாமலே திரும்பிச் சென்றதுடன் அவரது நாட்டில் அவரது மகன்களாலேயே படுகொலையும் செய்யப்பட்டார். (Ref: II kings- 19th chapter)
An Iraqi soldier exploring one of the recently found tunnels beneath the Prophet Jonah's shrine |
இந்த அகழ்வாய்வின்போது சனகரிப் அவரது மகன் மற்றும் பேரன் காலத்து பழமையான பொருட்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இந்த கண்டுபிடிப்பு வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மத்தியக் கிழக்கு நாடுகளின் வரலாற்றின் துல்லியத்தை மேலும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
News from : Israle Today
Read >>> திமிங்கலத்தின் வயிற்றில் யோனா, கற்பனை சம்பவம் அல்ல...! <<< Read
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக