Translate

கரிசனையுள்ளவர்களாயிருப்போம்...!



ஜலப்பிரளயத்துக்கு பின்பு அரராத் மலையின்மீது தங்கிய பேழையில் அனைத்து உயிரினங்களும் அடைந்துகிடந்த நேரத்தில் நோவா ஓர் காகத்தைமட்டும் வெளியே அனுப்பினார்.அது காலையில் வெளியே செல்வதும் மாலையில் வருவதுமாக இருந்ததே தவிர பேழையில் இருந்த யாருக்கும் எந்தவிதமான பிரயோஜனமான தகவலையும் கொண்டுவரவில்லை.ஆனால் சில நாட்களுக்கு பின்பாக அனுப்பப்பட்ட புறா பூமியின்மீது தாவரங்கள் வளர்ந்துவிட்டது என்ற பிரயோஜனமான தகவலை கொண்டுவந்தது. அதன்பயனாக பேழைக்குள் இருந்த அனைவரும் வெளியேறி நிலத்தில் கால்வைத்தனர்.

 இயேசு கிறிஸ்துவின்மூலமாக கிடைக்கும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பலர் குறுகியமனப்பான்மையுடன் மற்றவர்களைப்பற்றிய கரிசனையில்லாமல் வாழ்ந்துவருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் குறுகியமனப்பான்மையை விட்டு கிறிஸ்துவின் குணநலன்களை பிரதிபலிப்பதுடன் மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பை அறியும்படி அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக திகழ தேவன்தாமே கிருபை அருள்வாராக.
 சிந்தனைக்கு:-
⧫அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத் 28:18-20)
 ⧫அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.........அவருக்குள்  நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். (1யோவா 2:3,6)
 ⧫அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். (1யோவா 3:24)

அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்..!


இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பரலோகரஜ்ஜியத்தைக்குறித்து பிரசங்கம் செய்துகொண்டிருந்த காலத்தில் பல்வேறு தேவைகளோடு எதிர்பார்ப்புகளோடு அவரைத் தேடிவந்தவர்கள் பலர் உண்டு. வந்தவர்கள் அனைவரும் அளவற்ற நன்மைகளையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பு கடுமையான காயங்கள் நிறைந்த கசையடிகளால் கிழிக்கப்பட்ட அவரது உடலுக்கு மரியாதைசெய்ய அதிகாலமே சென்றாள் மகதலேனா மரியாள். சூழ்நிலைகள் எதுவுமே அவளுக்கு சாதகமானதாக இல்லை. இயேசுவோடு கூடஇருந்த சீடர்கள்கூட நம்பிக்கையிழந்தநிலையில் வேதனையோடு அறைவீட்டில் அடைந்துகிடந்தனர். உலகப்பிரகாரமாக யோசித்துப்பார்த்தால் இயேசுவிடமிருந்து இதற்குமேல் எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளமுடியாது, மாறாக ஓர் தேசத்துரோக குற்றவாளியின் உடலுக்கு மரியாதை செய்தவருக்கு என்ன மரியதை அல்லது தண்டனை கிடைக்கக்கூடுமோ அதுதான் கிடைக்கும். இவையனைத்தையும் தாண்டி அவரது கல்லறையை தேடி சென்றாள். பிரதிபலனை எதிர்பாராத போலியற்ற தூய அன்பு அவளது இருதயம் முழுவதும் நிறைந்திருத்தது. அந்த அன்பு அவளது பயத்தை முழுவதுமாக நீக்கியிருந்தது.

பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத் 5:8)' இயேசு கிறிஸ்துவை நேசிப்பவர்களை அவரை முழு இருதயத்தோடும் தேடுபவர்களை அவர் ஒருபோதும் வெறுமையாக அனுப்புவதேயில்லை. மரியாளுக்கும் அதுதான் நடந்தது. திரளான சீடர்கள், 12 பிரதான சீடர்கள் இருக்க இவர்கள் அனைவரையும் விடுத்து தன்னை ஆர்வமுடன் தேடிவந்த மரியாளுக்கு முதல்முதலில் தரிசனமானார். கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு முன்மாதிரியான பெண்ணாக அவளது பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.


.     'உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் -(எரே 29:14)'. பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது " அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. (சங் 34:5) "

அன்பானவர்களே.! சூழ்நிலைகள் அனைத்தும் எதிராக இருந்தபோதும்  இயேசுகிறிஸ்துவை நம்பிவந்த நீங்களும்  ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரையும் அவருடைய வல்லமையையும் நிச்சயமாகவே காண்பீர்கள்

ISIS- அமைப்பு வேதாகமத்துக்கு ஆற்றிய அருந்தொண்டு..!

ISIS-  என்ற  இஸ்லாமிய  அமைப்பு  பல்வேறு  நாடுகளின்   பகுதிகளை   ஆக்கிரமித்து   குறிப்பிட்ட   முறையிலான   ஆட்சியை   அமைக்க   முயன்றுவருகிறது.   இதன்பிடியில்   சிக்கிய   பகுதிகளில்   வசித்த   கிறிஸ்தவர்கள்   மற்றும்   சிறுபான்மையினரின்   நிலை   என்னவென்பது   நாம்   நன்கு   அறிந்ததே..!   இந்த   அமைப்பு   தனது   கட்டுப்பாட்டில்   உள்ள   பகுதியிலிருந்து   பழங்கால   நினைவுச்   சின்னங்கள்   கிறிஸ்தவ   மற்றும்   சில   இஸ்லாமிய   புனித   தலங்களாக   கருதப்படும்   கட்டிடங்களையும்   அழித்துவருகிறது.    ஆனால்   சமீபத்தில்   அவர்களை   அறியாமலேயே   பரிசுத்த   வேதாகமத்தின்   உண்மைத்  தன்மையை   மேலும்   ஒருமுறை   உறுதிசெய்ய   உதவி   நம்மை   மகிழ்ச்சிக்கு   உள்ளாக்கியுள்ளனர்.

The remains of the Tomb of Prophet  jonaha,
destroyed by Islamic State militants, in Mosul, Iraq

ISIS- அமைப்பு   ஈராக்   நாட்டின் மொசுல் (Mosul)   நகரை   கைப்பற்றியபோது அங்கிருந்த    புராதான நினைவிடமான   யோனா   தீர்க்கதரிசியின்   கல்லறையை   தகர்த்தது.    யோனா   தீர்க்கதரிசி   இறைவனின்   கட்டளைப்படி   நினிவே  பகுதிக்கு   சென்று   இறைவனின்   நியாயத்தீர்ப்பைக்    குறித்து   எச்சரித்து   அதன்  மூலம்   நினிவே   பட்டணத்தின்   அழிவைத்   தடுத்தவர்   என்பது   குறிப்பிடத்தக்கது.   இவர்   கிறிஸ்தவர்   யூதர்   இஸ்லாமியர்   ஆகிய   மும்மத   மக்களாலும்   சிறந்த   தீர்க்கதரிசியாக   கருதப்படுபவர்   ஆவார்.

சமீபத்தில்   ISIS-   அமைப்பு   போராளிகள்   மொசுல்   நகரைவிட்டு   ஈராக்கிய   ராணுவத்தால்   துரத்தப்பட்டனர்   அதற்கு   பின்பு   தொல்பொருள்   ஆய்வாளர்களுக்கு   அந்த   இடத்தை   ஆய்வு செய்ய   வாய்ப்பு   கிடைத்தது   தொல்லியல்   ஆய்வின்   பயனாக   அவர்கள்   ஆச்சரிய மூட்டும்   கண்டுபிடிப்பை   நிகழ்த்தினர்.   அந்த   இடத்துக்கு   அடியில்   ஏறக்குறைய   2600   ஆண்டுகளுக்கு   முன்பு   அசீரியாவை   ஆண்ட   சனகரீப்   என்ற   மன்னனின்   அரண்மனையின்   பகுதிகளை   கண்டுபிடித்தனர்.     இந்த    சனகரீப்   மன்னர்தான்   எசேக்கியா   ராஜாவின்   காலத்தில்  எருசலேமை முற்றுக்கையிட்டவர்.   தீர்கதரிசி   ஏசாயாவின்   முன்னறிவிப்பின்படி    போரிடாமலே   திரும்பிச்  சென்றதுடன்   அவரது நாட்டில்   அவரது   மகன்களாலேயே   படுகொலையும்   செய்யப்பட்டார். (Ref: II kings- 19th chapter)

An Iraqi soldier exploring one of the recently found tunnels beneath the Prophet Jonah's shrine

இந்த   அகழ்வாய்வின்போது   சனகரிப்   அவரது   மகன்   மற்றும்   பேரன்   காலத்து   பழமையான   பொருட்கள்   மற்றும்   பல்வேறு   தகவல்கள்   கிடைக்கப்பெற்றது.   இந்த   கண்டுபிடிப்பு   வேதாகமத்தில்   பதிவு  செய்யப்பட்டுள்ள   மத்தியக்  கிழக்கு   நாடுகளின்  வரலாற்றின்   துல்லியத்தை  மேலும்   ஒருமுறை   உறுதி செய்துள்ளது.

News from : Israle Today
Read more at :Foxnews , Dailymail , Telegraph.