Translate

சத்தியம்பண்ணவேண்டாம்...!

இயேசு கிறிஸ்து தமது ஊழிய பயணத்தின்போது ஒருமுறை திரளான ஜனங்களை பார்த்து   " நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  பரிச்சேதம்  சத்தியம் பண்ண வேண்டாம் வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்;  அது   தேவனுடைய   சிங்காசனம். பூமியின் பேரிலும்  சத்தியம் பண்ண வேண்டாம்,   அது  அவருடைய  பாதபடி;   எருசலேமின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம்,  அது  மகா ராஜாவினுடைய  நகரம்;  உன்  சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம்,  அதின்  ஒரு  மயிரையாவது  வெண்மையாக்கவும்  கறுப்பாக்கவும்  உன்னால் கூடாதே. உள்ளதை  உள்ளதென்றும்,  இல்லதை   இல்ல தென்றும்  சொல்லுங்கள்;  இதற்கு மிஞ்சினது   தீமையினால்   உண்டாயிருக்கும்.    "  (மத்தேயு 5:34-37)   என்று  கூறினார்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் தங்கள் இறைவன் மீதும் எருசலேம் நகரத்தின் மீதும் எருசலேமில் உள்ள தேவாலயத்தின் மீதும் சத்தியம் பண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வாறு சத்தியம் செய்த பலர் அவர்கள் சத்தியம் செய்தவற்றை நிறைவேற்றாமல் போவதும், சத்தியத்தை மீறிவிடுவதும் உண்டு. இத்தகைய செயல்களால் உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கா திருப்பாயாக” (யாத்திராகமம்-20:7) என்ற கட்டளையை மீறி தேவனுடைய தண்டனைக்கு ஆளாகினர். இதனால்தான் சத்தியம் செய்ய வேண்டாம் என்று அந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்து அறிவுரை கூறினார்.  இன்றும் கூட அனைவரும் உண்மையை மட்டுமே பேசுவார்கள்  என்றால்   சத்தியம் செய்தல்   என்ற செயலுக்கு தேவையே இருப்பதில்லையே...! 



 இந்த கூற்றை உதாரணத்துடன் விளக்குவதாக இருந்தால்  பின்வரும் விளக்கம் சிறப்பாக இருக்கக்கூடும். இந்த உலகில் பறவைகள் எதற்குமே சிறகுகள் இல்லை அவை அனைத்துமே குதித்து குதித்துதான் செல்கிறது என்று கற்பனை செய்து கொண்டால்  பறவை  என்ற  சொல்லுக்கும்  பறத்தல் என்ற  சொல்லுக்கும் தேவையே இருந்திருக்காதுஉண்மையுள்ள இறைவனாகிய இயேசு கிறிஸ்து தன் இரத்தத்தால் சொந்தமாக்கிய மனிதர்கள் அனைவரும் உண்மையையே பேச அருள் புரிவாராக.

Changes and blessings


“Change”- from the beginning of time to this minute human life goes through continuous change in all its aspect. Not all changes end up in the sea of happiness.  Some take us to the pinnacle of hopelessness.  All of us can understand the height of disappointment of such unfortunate changes.

Have you ever faced such kind of disappointment in life?
Do you think “when there is no hope at present how can i have hope for my future?”

For all the questions of life the answer is one it is hope. There was a boy called Joseph, living in a certain period of time. A Sudden catastrophe struck his happy life, taking him in to a stormy sea.

  • ·        His beloved father condemned him
  • ·        Hated by his own brothers
  • ·        He was left to be dead in a dry well.
  • ·        His brothers, whom he loved, sold him as a slave for 20 pieces of silver.
  • ·        He was falsely accused and was punished for the mistake he had not committed.
  • ·        The ones from whom he had hoped for help forgot him completely.


Through he faced such struggle in life there was not a moment in which he has murmured or gossiped. He chose to remain true to God. When the time came, God transformed his life completely. In the very same place where he was sold as a slave, he was given the authority next to the king.

  • ·        Those who tried to kill him,
  • ·        Those who pushed him into the dry well,
  • ·        Those who sold him as a slave,
  • ·        Whoever accused him falsely, all of them were in a situation to look for his favor. God had totally transformed his life. May be you are facing such situation in life. God is willing to change your life too. All you have to do is to obey his written word.

(ஏ)மாற்றங்களும் ஆசீர்வாதங்களும்


"மாற்றம்" - என்பது  அன்றுமுதல் இன்றுவரை 
               ஒவ்வொரு நாளும்
               ஒவ்வொரு மணிநேரமும் ... ஏன்      
               ஒவ்வொரு நிமிடமும் கூட
               ஒவ்வொருவருடய வாழ்க்கையிலும்  

தவிற்க இயலாத  அல்லது தடுக்க இயலாத  செயலே. வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள்  அனைத்துமே  நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதாக  இருப்பதில்லை  அவற்றில் சில  நம்மை வேதனை / விரக்தியின் உச்சத்திற்கே  கொண்டு செல்வதாகவும் அமைந்துவிடுவது  உண்டு. மனதால்  கூட நம்மால்  ஏற்றுக்கொள்ள முடியாத அப்படிப்பட்ட  மாற்றங்கள் தான்  "ஏமாற்றங்கள்". ஏமாற்றங்கள் என்பது  நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமான ஒன்று  ஆகையால் ஏமாற்றம் அடைந்த ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. 

  • நீங்கள் மிகுந்த வேதனை அல்லது அவமானத்தை  கொண்டுவந்த  (ஏ)மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறீர்களா
  •  நிகழ்காலமே கேள்விக்குறியாக மாறிவிட்டதே என நொந்து போய் இருக்கும் நான் எதிர் காலத்தை குறித்து என்ன கனவு காணமுடியும் என்று நினைகின்றீர்களா ?  
உங்கள் கேள்வி எதுவாக இருந்தாலும் பதில் ஒன்றே ஒன்றுதான். முடியும் என்று ஒரே வரியில் சொல்வதைவிட பலவிதமான ஏமாற்றங்களை வெற்றிகண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் உங்களுக்கு அதை விளக்க விரும்புகிறேன். நெடுங்காலத்திற்கு முன்பு யோசேப்பு என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் தன் தந்தைக்கு மிகவும் பிரியமானவன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் அவரது வாழ்க்கை படகு தடுமாறத் துவங்கியது.
              


யோசேப்பு அடிமையாக  விற்க்ப்படல் 

  1. தன்னை மிகவும் நேசிக்கும் தந்தையின் கண்டனத்துக்கு ஆளானார்.
  2. சொந்த சகோதரர்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளானார்.
  3.  சகோதரர்களின் கையாலே கொல்லப்படுவதற்க்கான சூழ்நிலைகள் உருவானது. பின்பு தண்ணீர் இல்லாத கிணற்றில் தள்ளப்பட்டார்.
  4.  அவர் மிகவும் நம்பின அவருடைய சகோதரர்கள் அவரை 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்றுப்போட்டார்கள்.
  5.  மறுபடியும் விற்ப்பனைக்கு (resale) ஆளானார்.
  6.  அபாண்டமாக பழி சுமத்தப்பட்டார், பின்பு செய்யாத  தவறுக்காக தண்டிக்கப்பட்டார்.
  7.  உதவி செய்வார்கள் என்று நம்பியவர்கள் கூட முற்றிலுமாக மறந்துவிட்ட நிலை ஏற்பட்டது.


அவருடைய வாழ்க்கையில் இத்தனை வேதனைகள்  வந்தபோதும் அவர் யாரையும் குறைகூறவில்லை.  ஆனால்   அவர்  ஒன்றே  ஒன்று செய்தார் ... அந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு முன்பாக உண்மை உள்ளவராக  இருந்தார் .குறித்த காலம் வந்தபோது ஆண்டவர் அவருடைய வாழ்கையை  முற்றிலுமாக மாற்றினார். எந்த இடத்தில் அவர் அடிமை ஆக  விற்கப்பட்டரோ  அதே இடத்தில்  அரசருக்கு நிகரான அதிகாரம் உள்ளவராக  மாற்றப்பட்டார். இப்போது...

  • யார் யார் அவரை  கொலைசெய்ய முயன்றார்களோ..!
  •  யார் யார் அவரை  படுகுழிக்குள் தள்ளினர்களோ ...!
  • யார் யார் அவரை  அடிமையாக  விற்றார்களோ..!
  • யார் யார் அவரை  அபாண்டமாக  குற்றம்சாட்டினார்களோ..! 
அனைவரும்  அவருடை தயவை நாடி வரவேண்டிய நிலையை ஆண்டவர் உருவாக்கினார் . நீங்களும் கூட உங்கள் வாழ்கையில் மிகுந்த  ஏமாற்றங்களையும்  வேதனைகளையும் சந்தித்திருக்கலாம்.  ஆண்டவர் உங்கள்  வாழ்வை மாற்ற விரும்புகிறார். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவது மட்டுமே..!