Translate

அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்..!


இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பரலோகரஜ்ஜியத்தைக்குறித்து பிரசங்கம் செய்துகொண்டிருந்த காலத்தில் பல்வேறு தேவைகளோடு எதிர்பார்ப்புகளோடு அவரைத் தேடிவந்தவர்கள் பலர் உண்டு. வந்தவர்கள் அனைவரும் அளவற்ற நன்மைகளையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பு கடுமையான காயங்கள் நிறைந்த கசையடிகளால் கிழிக்கப்பட்ட அவரது உடலுக்கு மரியாதைசெய்ய அதிகாலமே சென்றாள் மகதலேனா மரியாள். சூழ்நிலைகள் எதுவுமே அவளுக்கு சாதகமானதாக இல்லை. இயேசுவோடு கூடஇருந்த சீடர்கள்கூட நம்பிக்கையிழந்தநிலையில் வேதனையோடு அறைவீட்டில் அடைந்துகிடந்தனர். உலகப்பிரகாரமாக யோசித்துப்பார்த்தால் இயேசுவிடமிருந்து இதற்குமேல் எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளமுடியாது, மாறாக ஓர் தேசத்துரோக குற்றவாளியின் உடலுக்கு மரியாதை செய்தவருக்கு என்ன மரியதை அல்லது தண்டனை கிடைக்கக்கூடுமோ அதுதான் கிடைக்கும். இவையனைத்தையும் தாண்டி அவரது கல்லறையை தேடி சென்றாள். பிரதிபலனை எதிர்பாராத போலியற்ற தூய அன்பு அவளது இருதயம் முழுவதும் நிறைந்திருத்தது. அந்த அன்பு அவளது பயத்தை முழுவதுமாக நீக்கியிருந்தது.

பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத் 5:8)' இயேசு கிறிஸ்துவை நேசிப்பவர்களை அவரை முழு இருதயத்தோடும் தேடுபவர்களை அவர் ஒருபோதும் வெறுமையாக அனுப்புவதேயில்லை. மரியாளுக்கும் அதுதான் நடந்தது. திரளான சீடர்கள், 12 பிரதான சீடர்கள் இருக்க இவர்கள் அனைவரையும் விடுத்து தன்னை ஆர்வமுடன் தேடிவந்த மரியாளுக்கு முதல்முதலில் தரிசனமானார். கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு முன்மாதிரியான பெண்ணாக அவளது பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.


.     'உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் -(எரே 29:14)'. பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது " அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. (சங் 34:5) "

அன்பானவர்களே.! சூழ்நிலைகள் அனைத்தும் எதிராக இருந்தபோதும்  இயேசுகிறிஸ்துவை நம்பிவந்த நீங்களும்  ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரையும் அவருடைய வல்லமையையும் நிச்சயமாகவே காண்பீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக