Translate

பாவச் சூழ்நிலையும் வாழ்க்கையும்


தாமரை மலர்
இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டவர் ஒருவர். ஒரு குளத்தில் பூத்திருந்த தாமரை மலர்களைக் கண்டு வழிகாட்டியின் துணையுடன் அருகில் சென்றார். வழிகாட்டி தாமரையை பற்றிக்கூறி அதன் இலைகளில் தண்ணீர் ஒட்டுவதில்லை என்பதையும் கூறினார். இதை அந்த வெளிநாட்டவரால் நம்பவே முடியவில்லை. தண்ணீரை மொண்டு அதன் இலைகளின் மீது வீசியெறிந்தார். தண்ணீர் வைரத்துண்டுகள் போல் மின்னித்தெறித்தது. தண்ணீரிலே வளரும் தாமரையிலையின்மீது தண்ணீர் ஒட்டுவதில்லை என்பதை அறிந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் சென்றார்.

தாமரை லையின்மீது தண்ணீர்
எருசலேமிலிருந்து சிறைபிடித்துவரப்பட்ட தானியேல், சாத்ராக், மேஸாக், ஆபெத்நேகோ ஆகிய யூத வாலிபர்கள் பாபிலோன் அரண்மனையிலே வைக்கப்படுகிறார்கள். அழகிலும் அறிவிலும் சிறந்த அவர்களுக்கு  ராஜா உண்ணும் உணவும் உயர்ந்தவகை திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது. ஆனால் தானியேலோ இவற்றால் தன்னை தீட்டுப்படுத்தக்கூடாது; என்று தன் இருதயத்திலே தீர்மானம் பண்ணினான். நாம் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்ற வாஞ்சையும் தீர்மானமும் வேண்டும். சிலர் சொல்லக்கூடும்: நான் இருக்கும் இடத்தில் அல்லது நான் வேலைபார்க்கும் இடத்தில் பரிசுத்தமாய் வாழ வழியேயில்லை என்பதாக.


சாமுவேல் தன் தாயால் ஏலி தாத்தாவினிடத்தில் விடப்பட்டபோது சிறுவனாயிருந்தார். அங்கு அவர் ஏலியின் பிள்ளைகளோடுதான் வளர்க்கப்பட்டார். ஏலியின் பிள்ளைகள் பேலியாளின் பிள்ளைகளாயிருந்தார்கள் (1 சாமு 2:12). ஆனாலும் சாமுவேல் கெட்ட காரியங்களுக்கு தன்னை விலக்கிக் காத்துக்கொண்டார். 

நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். நாம் எங்கிருந்தாலும் அங்கு பாவ சூழ்நிலை இருக்கத்தான் செய்யும். குளத்தில் வளரும் தாமரை அல்லது கடலில் வாழும் மீன் எப்படி தனது வாழிடத்தை மாற்றிக்கொள்ள முடியாதோ அப்படி நாமும் பாவம்நிறைந்த இவ்வுலகில்தான் வாழவேண்டும். பாவம் செய்யத்தூண்டும் சூழ்நிலைகள் நெருக்கினாலும் சாமுவேலைப்போல தானியேலைப் போல நாம் நமது தீர்மானத்தில் உறுதியாயிருக்க தேவன் தாமே கிருபை செய்வாராக.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக